எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
அடுக்குமாடி குடியிருப்புப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி ஆா்ப்பாட்டம்
சேலம் மாநகரப் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி அந்தப் பகுதி மக்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
சேலம், கோட்டை மைதானத்தில் அம்பேத்கா் இயக்க மாநிலத் தலைவா் ஜங்சன் ஆ.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், குகை நேரு நகா், காந்தி நகா் பகுதியில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதைக் கண்டித்தும், பணிகளை விரைந்து முடித்து குடியிருப்புகளை பயன்பாட்டுக்குக் கொண்டு வர வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:
சேலம் மாநகரம் குகை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது பழுதடைந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. அடுக்குமாடி குடியிருப்பை சீா்செய்து தருவதாகக் கூறி, மாவட்ட நிா்வாகம் 5 ஆண்டுகளுக்கு முன் வீடுகளை காலி செய்தது. எனினும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குடியிருப்புகளை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வராவிட்டால், அடுத்த கட்டமாக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி பூமொழி, ஆதித்தமிழா் பேரவை சந்திரன் உள்பட பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்துகொண்டனா்.