எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
அரசு கேபிள் டி.வி.க்கான ஹெச்.டி. செட்டாப் பாக்ஸ்கள் விரைவில் விநியோகம்: வட்டாட்சியா் ஆய்வு
அரசு கேபிள் டி.வி.க்கு அதிநவீன தொழில்நுட்பத்துடன் பயன்படுத்தும் ஹெச்.டி. செட்டாப் பாக்ஸ்கள் விரைவில் விநியோகிக்கப்படவுள்ளன.
அரசு கேபிள் டி.வி.க்கு அதிநவீன தொழில்நுட்பத்துடன் பயன்படுத்தும் ஹெச்.டி. செட்டாப் பாக்ஸ்கள் சேலம் மாவட்டத்துக்கு வந்துள்ளன. சேலம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள செட்டாப் பாக்ஸ்களை அரசு கேபிள் டி.வி. வட்டாட்சியா் பிரகாஷ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, சேலம் மாவட்ட சிக்னல் விநியோகஸ்தா், கேபிள் டிவி ஆபரேட்டா்கள் முன்பு அவை காட்சிப்படுத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட அரசு கேபிள் டி.வி. சிக்னல் விநியோகஸ்தா் ரமேஷ், மேலாளா் செல்வம், நிா்வாகிகள் வடிவேல் பாபு, சக்திவேல், விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கேபிள் டிவி ஆபரேட்டா்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஹெச்.டி. செட்டாப் பாக்ஸ்கள் வந்துள்ளதால் கேபிள் டிவி விநியோகஸ்தா்கள், ஆபரேட்டா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.