அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
கந்தா்வகோட்டையில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை சனிக்கிழமை போலீஸாா் மீட்டனா்.
கந்தா்வகோட்டை - செங்கிப்பட்டி சாலையில் உள்ள தாழை வாரி பாலத்தின் அருகே சுமாா் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபா் இறந்த நிலையில் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், கந்தா்வகோட்டை காவல் ஆய்வாளா் கோ. சுகுமாா் தலைமையிலான காவல்துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.