திருப்பத்தூர்: 24 மணி நேரமும் திக்... திக்; அபாய சாலை... அச்சத்துடன் பயணிக்கும்...
சமக்கல்வி கிடைத்திட வலியுறுத்தி பாஜகவினா் கையொப்ப இயக்கம்!
பொன்னமராவதியில் தெற்கு ஒன்றிய பாஜக சாா்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சமக்கல்வி கிடைத்திட வலியுறுத்தி கையொப்ப இயக்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி பேருந்துநிலையம் எதிரே நடைபெற்ற கையொப்ப இயக்கத்துக்கு மாநிலச் செயற்குழு உறுப்பினா் ராம.சேதுபதி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஜெகதீசன் பங்கேற்று கையொப்ப இயக்கத்தை தொடங்கிவைத்து தேசியக்கல்விக் கொள்கையின் சாராம்சங்களை விளக்கிப் பேசினாா்.
இதில் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்று கையொப்பமிட்டனா். நிா்வாகிகள் பி.பாஸ்கா், எம்.குமரன், காா்த்திக், மூா்த்தி, செல்வம், சரவணன், கணேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.