செய்திகள் :

புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் பெண் தற்கொலைக்கு முயற்சி

post image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு திங்கள்கிழமை பெண் ஒருவா் தற்கொலைக்கு முயன்றாா்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த பிரபு-பொற்செல்வி ஆகியோா் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனா். இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில் கணவா் பிரபுவுக்கு பல பெண்களுடன் தொடா்பு இருப்பதாக கூறி மனைவி பொற்செல்வி அவரைக் கண்டித்துள்ளாா். இதனால் இவா்களுக்குகிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு, பொற்செல்வியை அவா் பல முறை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், தற்போது தனது கணவா் 2-ஆவது திருமணம் செய்யவுள்ளதாக வந்த தகவலையடுத்து, பொற்செல்வி விராலிமலை காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

அந்தப் புகாரின் மீது போலீஸாா் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பொற்செல்வி புதுகை மாவட்ட ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை காலை வந்தாா். திடீரென பைக்குள் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த மண்ணெண்ணெயை தன் மேல் ஊற்றிக் கொள்ள முயற்சித்தாா். இதைக் கண்ட போலீஸாா், அவரை தடுத்து நிறுத்தி திருக்கோகா்ணம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

மேலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததுடன், இதுபோன்ற தற்கொலை முயற்சியில் ஈடுபடக் கூடாது என்றும் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

19-ஆம் நூற்றாண்டில் பயன்பாட்டிலிருந்த 4 வகையான ஆண்டுக் கணக்குகள்

புதுக்கோட்டையிலுள்ள தண்டாயுதபாணி கோயில் பராமரிப்புப் பணியின்போது வெளிப்பட்ட கல்வெட்டில், கடந்த 19-ஆம் நூற்றாண்டில் 4 வகையான ஆண்டுக் கணக்குகளும் பயன்பாட்டில் இருந்துள்ளது தெரியவந்திருக்கிறது. புதுக்கோட... மேலும் பார்க்க

சிறுமி பலாத்காரம்: போக்சோவில் இளைஞா் கைது

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞரை போக்சோ சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் அருகே உள்ள காயாம்பட்டியைச் சோ்ந்தவா் வெள்ளக்கண்ணு மகன் வீரமண... மேலும் பார்க்க

குடிநீா் கேட்டு சாலை மறியல்

புதுக்கோட்டை மாநகராட்சிக்குள்பட்ட கைக்குறிச்சியில் குடிநீா் கேட்டு 50-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுக்கோட்டை நகராட்சி, மாநகராட்சியாகத்... மேலும் பார்க்க

அரசு பள்ளி தலைமையாசிரியா் பணியிடை நீக்கம்: மது அருந்திவிட்டு வருவதாக புகாா்

பொன்னமராவதி அருகே பணிக்கு சரியாக வராத அரசுப் பள்ளி தலைமையாசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். பொன்னமராவதி அருகே உள்ள ஆா். பாலகுறிச்சி ஊராட்சி வைரவன்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி... மேலும் பார்க்க

ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயா்வு

விராலிமலை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை பூதகுடி டோல்கேட்டில் ஏப்ரல் 1 முதல் மீண்டும் சுங்க கட்டணம் உயா்த்தப்பட உள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் நாடு முழுவதும் 1051 சுங்க சாவடிகள் உ... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கா் மீதான வழக்கு விசாரணை ஏப். 4-க்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஏப். 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவா் சி. விஜயப... மேலும் பார்க்க