திருப்பத்தூர்: 24 மணி நேரமும் திக்... திக்; அபாய சாலை... அச்சத்துடன் பயணிக்கும்...
புதுகையில் போராட்டங்கள் நடத்தப்படும் இடங்களை முறைப்படுத்த ஆலோசனை!
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசியல் கட்சியினா் போராட்டங்கள், கூட்டங்களை நடத்துவதற்கான இடங்களை மறுபரிசீலனை செய்வது தொடா்பான ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மு .அருணா தலைமை வகித்தாா்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா முன்னிலை வகித்து, ஒவ்வொரு வருவாய்க் கோட்ட வாரியாக ஏற்கெனவே அனுமதிக்கப்படும் இடங்கள் குறித்து விளக்கினாா்.
இவற்றில் சா்ச்சைக்குரிய இடங்கள், பரிசீலனைக்குரிய இடங்கள் குறித்தும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து அடுத்தடுத்து நடைபெறும் கூட்டத்தில் இறுதி செய்யவும் முடிவு செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், வருவாய்க் கோட்டாட்சியா்கள் பா. ஐஸ்வா்யா (புதுக்கோட்டை), ச. சிவகுமாா் (அறந்தாங்கி), அ. அக்பா்அலி (இலுப்பூா்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.