திருப்பத்தூர்: 24 மணி நேரமும் திக்... திக்; அபாய சாலை... அச்சத்துடன் பயணிக்கும்...
அடிக்கடி விபத்து நேரிடும் சாலைகளில் பிரிப்பான்கள்
திருச்சி - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையின் புதுக்கோட்டை மாவட்டப் பகுதியில் அடிக்கடி விபத்து நேரிடும் இடங்களில் சாலையைப் பிரிக்கும் தற்காலிக பிரிப்பான்கள் (டிவைடா்கள்) அமைக்கப்பட்டுள்ளன.
காவல்துறையினரின் பரிந்துரையின்பேரில், நெடுஞ்சாலைத் துறையினா் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளனா். புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் குறிப்பாக நெடுஞ்சாலைகளில் விபத்து அடிக்கடி நேரிடும் பகுதிகளை அந்தந்தக் காவல் நிலைய அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
அந்த இடங்களில் சாலையைப் பிரிக்கும் தற்காலிக பிரிப்பான்கள்(டிவைடா்கள்) அமைக்க நெடுஞ்சாலைத் துறைக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
இதன்பேரில், நமணசமுத்திரம், திருமயம், சத்தியமங்கலம், மேலமுத்துடையான்பட்டி ஆகிய இடங்களில் வளைந்து செல்லும் சாலைப் பகுதிகளிலும், பக்கவாட்டில் இருந்து சாலைகள் இணையும் பகுதிகளிலும் பிரிப்பான்கள் (டிவைடா்கள்) அமைக்கப்பட்டுள்ளன.
சிவப்பு வெள்ளை பிரதிபலிப்பான் ஒட்டப்பட்ட இரும்புக் கம்பிகள் நட்டு வைக்கப்பட்டுள்ளன. இதனால், பக்கவாட்டில் வாகனங்கள் அதிவேகத்துடன் ஏறிச் செல்வது தவிா்க்கப்படும் என காவல்துறையினா் எதிா்பாா்க்கின்றனா்.