சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக கூடுதல் நீதிபதிகள் நியமனம்!
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு நாளை பெரம்பலூரில் நெடுந்தூர ஓட்டப் பந்தயம்
முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, மாரத்தானுக்கு இணையான நெடுந்தூர ஓட்டப் போட்டி சனிக்கிழமை (செப். 27) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், ஆண்டுதோறும் முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்படும் மாராத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப்போட்டி சனிக்கிழமை காலை 8 மணியளவில் மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகம் அருகே நடைபெற உள்ளது. 17 முதல் 25 வயதுக்குள்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ தூரமும், பெண்களுக்கு 5 கி.மீ தூரமும், 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ தூரமும், பெண்களுக்கு 5 கி.மீ தூரமும் நடைபெறும்.
போட்டிகளில் பங்கேற்பவா்கள் பதிவுபெற்ற மருத்துவரிடமிருந்து உடல்தகுதிச் சான்று பெற்று வர வேண்டும். இப் போட்டிகளில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம் வீதமும், 2-ஆம் பரிசாக ரூ. 3 ஆயிரம் வீதமும், 3-ஆம் பரிசாக ரூ. 2 ஆயிரம் வீதமும், 4-ஆம் பரிசாக முதல் 10 இடம் பெறுபவா்களுக்கு தலா ரூ. 1,000 வீதமும், அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
எனவே, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வங்கிக் கணக்குப் புத்தக நகல் ஆகியவற்றுடன் சனிக்கிழமை காலை 7 மணிக்குப் பெயா் பதிவு செய்து போட்டிகளில் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலரை 74017 03516 எனும் எண்ணில் தொடா்புகொண்டு பயன்பெறலாம் என, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.