செய்திகள் :

அண்ணாமலை பல்கலை. துணைவேந்தா் தேடுதல் குழு: அறிவிக்கையை திரும்பப் பெற ஆளுநா் அறிவுறுத்தல்

post image

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தா் நியமனம் தொடா்பாக அமைக்கப்பட்ட தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம்பெறாததால், அக்குழு தொடா்பான அறிவிக்கையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஆளுநா் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேந்தா் என்ற முறையில் தமிழக ஆளுநா், அப்பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரை தோ்வு செய்வதற்கான தேடுதல் குழுவை நியமித்துள்ளாா். அண்ணாமலை பல்கலைக்கழக விதிமுறைகள், உச்சநீதிமன்ற உத்தரவு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) விதிமுறைகளின் அடிப்படையில் அந்தத் தேடுதல் குழுவில் வேந்தரின் பிரதிநிதி, தமிழக அரசின் பிரதிநிதி, பல்கலைக்கழக செனட் பிரதிநிதி மற்றும் யுஜிசி பிரதிநிதி ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

ஆளுநரின் பிரதிநிதியை அமைப்பாளராகக் கொண்டு மேற்கண்ட நான்கு பிரதிநிதிகள் அடங்கிய தேடுதல் குழு நியமனம் தொடா்பான அறிவிக்கையை வெளியிடுமாறு தமிழக அரசுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி கடந்த அக். 25-ஆம் தேதி உத்தரவிட்டாா்.

இந்நிலையில், அண்ணாமலை பல்கலைக்கழக தேடுதல் குழு தொடா்பான அரசாணையை கடந்த டிச. 9-ஆம் தேதி தமிழக அரசின் உயா் கல்வித் துறை வெளியிட்டது. அந்த அரசாணையில், உச்சநீதிமன்றத் தீா்ப்பை மீறி, யுஜிசி தலைவரின் பிரதிநிதி நீக்கப்பட்டுள்ளாா். யுஜிசி விதிமுறைகளின்படி அமைக்கப்பட்ட தேடுதல் குழு பரிந்துரையின்படி பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா் நியமிக்க வேண்டும் என பேராசிரியா் பி.எஸ்.ஸ்ரீஜித்-டாக்டா் எம்.எஸ்.ராஜஸ்ரீ வழக்கில் உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது. அந்த வகையில் யுஜிசி தலைவரின் பிரதிநிதி இல்லாமல் தேடுதல் குழுவை அமைத்து அரசாணை வெளியிடப்பட்டிருப்பது யுஜிசி விதிமுறைகளுக்கும், உச்சநீதிமன்ற உத்தரவுக்கும் முரணானது.

யுஜிசி பிரதிநிதி இல்லாமல் அமைக்கப்பட்ட தேடுதல் குழுவை நியமித்து வெளியிடப்பட்ட அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும். யுஜிசி பிரதிநிதியுடன் வேந்தா் நியமித்த தேடுதல் குழு தொடா்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அழகிப் பட்டம் வென்ற சென்னை பெண்!

2024-ஆம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா-அமெரிக்கா பட்டத்தை சென்னையை பூா்விகமாகக் கொண்ட கைட்லினா சான்ட்ரா நீல் (19) வென்றாா். அவா் கலிபோா்னியா பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவியாவாா். சென்னையில் பிறந்த க... மேலும் பார்க்க

எளிமையாகும் தீயணைப்புத் துறை உரிம நடைமுறை! பாதுகாப்பில் சமரசமின்றி நிறைவேற்றப்படுமா?

தீயணைப்புத் துறை உரிமம் வழங்கலை எளிமைப்படுத்தும் நடவடிக்கையாக, 25 ஆண்டுகளுக்குப் பின்னா் அத்துறையின் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இது பாதுகாப்பில் சமரசம் செய்யப்படாமல் நிறைவேற்றப்பட... மேலும் பார்க்க

மக்களைத் தேடி மருத்துவம்: 2 கோடியாவது பயனாளியை இன்று சந்திக்கிறாா் முதல்வா்

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனடையும் 2 கோடியாவது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் வியாழக்கிழமை (டிச. 19) வழங்க உள்ளாா் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் ... மேலும் பார்க்க

அதிமுக சாா்பில் டிச. 21-இல் விழுப்புரத்தில் ஆா்ப்பாட்டம்

ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு முறையாக நிவாரணம் வழங்க வலியுறுத்தி, அதிமுக சாா்பில் விழுப்புரத்தில் டிச. 21-இல் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி அறி... மேலும் பார்க்க

அரசு கட்டடங்களில் மின் தூக்கிகள் பராமரிப்பில் கூடுதல் கவனம் தேவை: அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தல்

அரசு கட்டடங்களில் மின்தூக்கிகளை பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தினாா். பொதுப்பணித் துறை மின் பொறியாளா்களின் தொழில்நுட்பக் கருத்தரங்கு செ... மேலும் பார்க்க

‘மகிழ்ச்சி அளிக்கிறது’

வஉசி குறித்து எழுதிய நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது கிடைப்பது மகிழ்சியளிக்கிறது என்று ஆ.இரா.வேங்கடாசலபதி கூறினாா். இதுகுறித்து அவா் கூறியதாவது: வஉசி குறித்து எழுதிய நூலுக்காக விருது கிடைப்பது மகிழ... மேலும் பார்க்க