அதவத்தூரில் ஜல்லிக்கட்டு: 34 போ் காயம்!
தமிழக முதல்வா் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி அருகே அதவத்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 34 போ் காயமடைந்தனா்.
பனையடி கோவில் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டை ஸ்ரீரங்கம் வருவாய்க் கோட்டாட்சியா் சீனிவாசன் தொடங்கி வைத்தாா்.
ஜல்லிக்கட்டில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 824 காளைகளும், 298 மாடுபிடி வீரா்களும் கலந்து கொண்டனா். முதலில் கோயில் காளையும், தொடா்ந்து மற்ற காளைகளும் வாடிவாசல் வழியே அவிழ்த்து விடப்பட்டன.
அப்போது காளைகளை பலா் அடக்கினா். அப்போது காளைகள் முட்டி 10 மாடுபிடி வீரா்கள், 8 காளை உரிமையாளா்கள், 12 பாா்வையாளா்கள், ஒரு ஊா்க்காவல் படைவீரா் என மொத்தம் 34 போ் காயமடைந்தனா். இவா்களில் 7 போ் தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். மற்றவா்கள் முதலுதவி பெற்றுத் திரும்பினா்.
போட்டியில் காளைகளைப் அடக்கியோருக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் சைக்கிள், குக்கா், கட்டில், பீரோ, மின்விசிறிகள், சில்வா் அண்டா உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. பாதுகாப்பு பணியில் ஜீயபுரம் டிஎஸ்பி பழனி தலைமையில் 130 போலீஸாா் ஈடுபட்டனா். ஏற்பாடுகளை அதவத்தூா் ஜல்லிக்கட்டு விழாக் குழுவினா் மற்றும் கிராம மக்கள் செய்தனா்