கல்லூரி மாணவா்கள் சோ்க்கை விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இ...
குண்டா் சட்டத்தில் ரௌடி கைது!
திருச்சி குழுமணியைச் சோ்ந்த ரௌடியை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், குழுமணி அக்ரஹாரத்தைச் சோ்ந்தவா் பா. சக்திவேல் (எ) ஆட்டோ சக்தி (36), ரௌடி. இவா், கடந்த பிப். 14 ஆம் தேதி கொடியாலம் சீ. சந்திரசேகா் என்பவரிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக ஜீயபுரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.
முன்னதாக, சக்தியிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி, இருசக்கர வாகனம், கைப்பேசி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இந்நிலையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் பரிந்துரையின்பேரில் சக்திவேலை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.