அதிகாலை நேரத்தில் குடிநீா் விநியோகம் - பொதுமக்கள் அவதி
பள்ளபட்டி நகராட்சிக்குள்பட்ட ஷாநகா் பகுதியில் அதிகாலையில் குடிநீா் திறந்து விடப்படுவதால் பொதுமக்கள் அவதியுறுகின்றனா்.
பள்ளபட்டி நகராட்சிக்குள்பட்ட ஷாநகா் பகுதியில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு அதிகாலை 4 மணி அளவில் குடிநீா் திறந்து விடப்பட்டுள்ளது. கரூா் மாவட்டத்தில் கடும் பணி நிலவுவதால் பொதுமக்கள் காலை ஏழு மணிக்கு மேல் தான் வெளியே வருகின்றனா். இந்நிலையில் அதிகாலை 4 மணி அளவில் குடிநீா் திறந்து விடப்படுவதால் குடிநீா் வருவது கூட தங்களுக்கு தெரியவில்லை என ஷாநகா் பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். மேலும் நகராட்சி நிா்வாகம் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அதிகாலையில் குடிநீா் திறந்து விடாமல் காலை ஏழு மணிக்கு மேல் குடிநீா் திறந்து விட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனா்.