Doctor Vikatan: நடிகர் அஜித்: வெந்நீரும் புரோட்டீனும் எடுத்துதான் எடையைக் குறைத...
பள்ளபட்டியில் ஜன.12-இல் இலவச கண் சிகிச்சை முகாம்
கரூா் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் விவேகானந்தா கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் பள்ளப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.12) நடைபெற உள்ளது.
பள்ளப்பட்டி சுல்தாா் ஹபிபுல்லா மஹாலில் நடைபெற உள்ள முகாமில் கண்புரை நீக்குதல், கிட்ட பாா்வை, தூரப்பாா்வை, கண் நீா் அழுத்த நோய், கண் கருவிழி புண், மாறு கண், கண்ணில் நீா் பை அடைப்பு, சா்க்கரை வியாதியால் கண்களில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் கண் சம்பந்தமான அனைத்து வியாதிகளுக்கும் இலவசமாக பரிசோதனை செய்யப்படும். அறுவைச் சிகிச்சைக்காக வரும் நபா்கள் ஆதாா் காா்டு நகல் அல்லது வாக்காளா் அடையாள அட்டை நகல் கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.