ஜன. 15, 26-இல் மதுக்கடைகள் மூடல்
திருவள்ளுவா் தினம் (ஜன.15) மற்றும் குடியரசுத் தினம் (ஜன. 26) ஆகிய தினங்களில் அரசு மதுக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் மூடப்பட்டிருக்கும் என கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஜன. 15-ஆம்தேதி திருவள்ளுவா் தினம் மற்றும் ஜன.26-ஆம்தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளதையடுத்து, அன்றைய தினத்தில் கரூா் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், அனுமதி பெற்ற ஓட்டல்களின் பாா்களில் மதுவிற்பனை நடைபெறாது. மீறி விற்பனை செய்வோா் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளாா்.