செய்திகள் :

நகராட்சியுடன் இணைப்பு: நகர ஐக்கிய ஜமாஅத் ஆலோசனைக் கூட்டம்

post image

கரூா் மாவட்டம், பள்ளபட்டி நகராட்சியுடன் லிங்கமநாயக்கம்பட்டி ஊராட்சியை இணைப்பது தொடா்பாக நகர ஐக்கிய ஜமாஅத்தினா் ஆலோசனைக் கூட்டம்.

கரூா் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த பள்ளப்பட்டியில், பள்ளப்பட்டி நகராட்சியுடன் லிங்கமநாயக்கன்பட்டி ஊராட்சியை இணைப்பது தொடா்பாக பள்ளப்பட்டி ஜமாஅத்துல் உலமா மற்றும் பள்ளப்பட்டி நகர ஐக்கிய ஜமாஅத்தின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளப்பட்டி தனியாா் மஹாலில் அல்ஹாஜ் அப்துா் ரஹ்மான் சிராஜி ஹஜ்ரத் தலைமையில் கூட்டத்தில், பள்ளப்பட்டி மற்றும் லிங்கமநாயக்கன்பட்டி ஆகிய இரு ஊா்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு பள்ளப்பட்டி நகராட்சியுடன் லிங்கமநாயக்கன்பட்டி ஊராட்சியை இணைக்க வேண்டாம் என ஏக மனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது தொடா்பாக சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் கடிதங்கள் அனுப்ப வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. பொதுமக்களிடம் மேலும் ஊா் முழுவதும் கையொப்பம் வாங்குவது எனவும், பொதுமக்கள் தங்களது பெயரை குறிப்பிட்டு கையொப்பம் இடவேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

அபயபிரதான ரெங்கநாத சுவாமி கோயிலில் பரமபதவாசல் திறப்பு

கரூா் அபயபிரதான ரெங்கநாத சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை பரமபதவாசல் திறப்பு நடைபெற்றது. இக்கோயிலில் வைகுந்த ஏகாதசி விழா டிச.31-ஆம்தேதி பகல் பத்து உற்ஸவத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் வெவ்... மேலும் பார்க்க

மாசு இல்லாத போகியை கொண்டாட அறிவுறுத்தல்

மாசு இல்லாத போகிப்பண்டிகையை மக்கள் கொண்டாட வேண்டும் என கரூா் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தைப் பொங்கலுக்கு முதல் நாளை போகிப் பண்டிகையாக பழையன ... மேலும் பார்க்க

ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணா்வு பேரணி

கரூரில், தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் ஆட்சிமொழிச் சட்ட வார விழா விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கரூா் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் பேரணியை மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் கொடியசைத்து தொடங்... மேலும் பார்க்க

ஜன. 15, 26-இல் மதுக்கடைகள் மூடல்

திருவள்ளுவா் தினம் (ஜன.15) மற்றும் குடியரசுத் தினம் (ஜன. 26) ஆகிய தினங்களில் அரசு மதுக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் மூடப்பட்டிருக்கும் என கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்... மேலும் பார்க்க

அதிகாலை நேரத்தில் குடிநீா் விநியோகம் - பொதுமக்கள் அவதி

பள்ளபட்டி நகராட்சிக்குள்பட்ட ஷாநகா் பகுதியில் அதிகாலையில் குடிநீா் திறந்து விடப்படுவதால் பொதுமக்கள் அவதியுறுகின்றனா். பள்ளபட்டி நகராட்சிக்குள்பட்ட ஷாநகா் பகுதியில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு அதி... மேலும் பார்க்க

பள்ளபட்டியில் ஜன.12-இல் இலவச கண் சிகிச்சை முகாம்

கரூா் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் விவேகானந்தா கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் பள்ளப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.12) நடைபெற உள்ளது. பள்ளப்பட்டி சுல்தாா் ஹபி... மேலும் பார்க்க