செய்திகள் :

அதிமுக உள்கட்சி விவகாரம்: எழுத்துப்பூர்வ விளக்கமளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு!

post image

அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும்? என்ற காலவரம்பு விவரங்களைக் குறிப்பிட்டு ஜூலை 21 ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவில், "அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்கள் மீதான ஆரம்பகட்ட விசாரணையை நடத்தி முடிக்க, தேர்தல் ஆணையத்துக்கு கால வரம்பு நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும்.

2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்குத் தயாராக வேண்டியுள்ள சூழலில், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. ஆரம்ப கட்ட விசாரணையை தேர்தல் ஆணையம் தாமதப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தேர்தல் ஆணையம், அதிகார வரம்பு குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்காவிட்டால், அது அதிமுகவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்" என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், கே.சுரேந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில், "சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி இரண்டு மாதங்கள் நிறைவடைந்த பின்னரும் அது தொடர்பாக எந்த உத்தரவும் தற்போது வரை பிறப்பிக்கவில்லை.

தேர்தல் நெருங்கும் நிலையில் விரைவாக உத்தரவு பிறப்பிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். மேலும் இதுபோன்ற வழக்குகளில் மூன்று மாதங்களில் முடிவெடுக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதா?" என வாதிடப்பட்டது.

அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், "இந்த விவகாரம் தொடர்பாக 6 புகார்கள் வந்துள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக பரிசீலித்து உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். இந்த விவகாரத்தில் விரைவில் முடிவுகள் அறிவிக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், அரசியல் சாசன அமைப்பான தேர்தல் ஆணையம் உரிய நேரத்தில் உத்தரவு பிறப்பிக்காவிட்டால் தங்கள் அரசியல் சாசன கடமையைச் செய்யத் தவறுகிறார்கள் என்பது போன்றது அல்லவா? என்று கேள்வி எழுப்பினர்.

மேலும் இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தயக்கம் காட்டுவதைப்போல தெரிகிறது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் குடியரசுத் தலைவருக்கே காலவரம்பு நிர்ணயித்துள்ள நிலையில், தேர்தல் ஆணையம் குடியரசுத்தலைவரைவிட உயர்ந்ததா? என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையத் தரப்பு வழக்கறிஞர், அரசியல் சாசனத்தில் உயர்ந்த அதிகாரி, தாழ்ந்த அதிகாரி என்று எதுவும் இல்லை. அரசியல் சாசனத்தில் அனைத்து அதிகாரிகளும் சமமானவர்கள். மேலும் இந்த விவகாரத்தில் எப்போது முடிவெடுக்கப்படும்? என அதிகாரிகளைக் கேட்டுத் தெரிவிப்பதாகக் கூறினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பான புகார்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும் என காலவரம்பை குறிப்பிட்டு எழுத்துப்பூர்வமான விளக்கத்தை தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Madras High Court has ordered the Election Commission to provide a written explanation regarding the AIADMK internal party issue.


பாஜகவின் ஒரு பிரிவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: ராகுல் குற்றச்சாட்டு

அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்: அமித் ஷாவின் கருத்துக்கு இபிஎஸ் பதில்!

கூட்டணி ஆட்சி என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறிய நிலையில், தமிழ்நாட்டில் அதிமுக பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சியமைக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 'தி நியூ இந்தியன் எ... மேலும் பார்க்க

பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: தவெக திட்டவட்டம்

தவெகவுடன் கூட்டணிக்கு முயற்சிப்போம் என அமைச்சர் அமித் ஷா கூறிய நிலையில், பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என தவெக தலைமை கூறியுள்ளது. 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கு அளித்த நேர்காணலில், தவெக... மேலும் பார்க்க

கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம்!

கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ஜூலை 8 ஆம் தேதி ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத... மேலும் பார்க்க

வண்டலூர் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை!

சென்னை வண்டலூர் அருகே குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளான விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிக... மேலும் பார்க்க

சமூக வலைதளக் கணக்குகளை மீட்டுத்தரக் கோரி டிஜிபியிடம் ராமதாஸ் புகார்!

அன்புமணி ஆதரவாளர்களிடமிருந்து சமூக வலைதளக் கணக்குகளை மீட்டு தரக்கோரி டிஜிபியிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் புகார் அளித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் ... மேலும் பார்க்க

அறநிலையத் துறை கல்வி நிலையங்களை புரிந்து கொள்ளாமல் கருத்துக் கூறக் கூடாது அமைச்சா் பி.கே.சேகா் பாபு

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தொடங்கப்பட்டுள்ள கல்வி நிலையங்களின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளாமல் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிச்சாமி கருத்துக் கூறக் கூடாது என அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரி... மேலும் பார்க்க