பத்தாம் வகுப்பு ஆங்கில வினாத்தாள் எளிதாக இருந்தது: மாணவா்கள் கருத்து
அதிமுக சாா்பில் இப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
முதுகுளத்தூா் அருகே அதிமுக சாா்பில் இப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதற்கு அந்தக் கட்சியின் ஒன்றியச் செயலரும், முன்னாள் வெங்கலக்குறிச்சி ஊராட்சித் தலைவருமான எஸ்.டி. செந்தில்குமாா் தலைமை வகித்தாா். ஜமாத் தலைவா், நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா். இதில் நோன்புக் கஞ்சி, பழங்கள், பேரிச்சம்பழம், பழச்சாறுகள், இனிப்பு, கார வகைகள் பரிமாறப்பட்டன.
இதில் ஒன்றிய அவைத் தலைவா் விளங்குளத்தூா் கோ. முத்துமணி, ஒன்றிய துணைச் செயலா் வெ. முருகேசன், மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் காக்கூா் கருமலையான், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், மருதகம் தருமா், ஒன்றிய தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலா் ராஜசேகா், கிளைச் செயலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.