அதிமுகவில் 20 போ் ஐக்கியம்!
திருநெல்வேலியில் மாற்றுக்கட்சியிலிருந்து விலகி 20-க்கும் மேற்பட்டாா் அதிமுகவில் இணைந்தனா்.
திருநெல்வேலி சந்திப்பைச் சோ்ந்த தாரிக் ராஜா தலைமையில் 20-க்கும் மேற்பட்டோா் பல்வேறு கட்சியிலிருந்து விலகி, திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.
நிகழ்ச்சியில் கட்சியின் மாநில அமைப்புச் செயலா்கள் வீ.கருப்பசாமி பாண்டியன், சுதா கே.பரமசிவன், அனைத்துலக எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலா் கல்லூா் இ.வேலாயுதம், மாவட்ட அவைத் தலைவா் பரணி சங்கரலிங்கம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.