செய்திகள் :

அதிமுகவில் நான் சாதாரண தொண்டன்: செங்கோட்டையன்

post image

அதிமுகவில் தான் சாதாரண தொண்டன் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பெயர் பட்டியல் இன்று (பிப். 17) வெளியானது. இதில் செங்கோட்டையனின் பெயர் இடம்பெறவில்லை.

இந்நிலையில் திருச்சியில் இது குறித்து செய்தியாளர்களுடன் செங்கோட்டையன் பேசியதாவது,

''தொடர்ந்து வெற்றி பெற்ற அந்தியூர் சட்டப்பேரவைத் தொகுதியில் துரோகிகள் சிலரால் தோல்வி ஏற்பட்டது என்று கூறியிருந்தேன். அந்தியூர் தொகுதியை மட்டும் தான் குறிப்பிட்டேனே தவிர வேறு எந்தத் தொகுதியையும் குறிப்பிடவில்லை'' எனக் குறிப்பிட்டார்.

மேலும், ஓ. பன்னீர்செல்வம் அணியில் இடம்பெறவுள்ளதாக எழுந்த பேச்சுக்கள் குறித்து பேசிய அவர்,

''அதைப் பற்றி அவர்களிடம் (ஓ. பன்னீர் செல்வம் அணி) தான் கேட்க வேண்டும். அமைதியாக அவரவர் தங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தால் அதுவே நல்லது. அதிமுகவில் நான் ஒரு சாதாரண தொண்டன்'' எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல்! செங்கோட்டையன் பெயர் இடம்பெறவில்லை!

அஞ்சலையம்மாள் சிலைக்கு விஜய் மரியாதை!

சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலையம்மாள் நினைவு நாளையொட்டி சென்னை பனையூரில் உள்ள அவரது சிலைக்கு தமிழக வெற்றிக் கழகத்தில் தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.தவெகவின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான அஞ்சலையம்ம... மேலும் பார்க்க

தமிழகத்தில் வெயில் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்!

தமிழகத்தில் பிப். 23, 24 தேதிகளில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: பிப். 20, 21 தேத... மேலும் பார்க்க

தமிழ்மொழி வளர்ச்சியில் தமிழக அரசு அக்கறை காட்டாதது ஏன்?: ராமதாஸ் கேள்வி

இந்தி எதிர்ப்பில் காட்டும் அதே அக்கறையை தமிழ்மொழி வளர்ச்சியில் தமிழக அரசு காட்டாதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பது எந்த அளவுக்கு நியாயமானதோ, தமிழை கட... மேலும் பார்க்க

அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் அண்ணா சாலை வரச் சொல்லுங்கள்: உதயநிதி சவால்

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கல்வி நிதி, கும்பமேளா கூட்ட நெரிசல், மும்மொழிக் ... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழகத்தின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க மேற்பார்வைக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

நமது நிருபர்தமிழ்நாடு அரசு எழுப்பியுள்ள பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணி தொடர்பான பிரச்னைகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மேற்பார்வையிட புதிதாக அமைக்கப... மேலும் பார்க்க

தோ்வா்களிடம் லஞ்சம்: 5 ரயில்வே அதிகாரிகளை கைது செய்தது சிபிஐ

தோ்வா்களிடம் லஞ்சம் பெற்ற வழக்கில், 5 ரயில்வே அதிகாரிகள் உள்பட 6 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. இதுதொடா்பாக சிபிஐ புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மேற்கு ரயில்வேயின் துறை சாா்ந்த தோ்வில், தோ... மேலும் பார்க்க