செய்திகள் :

அதிர்ஷ்ட பணமாக நீரஜ் பெற்ற 1 ரூபாய்; காதலில் விழுந்தது `டு' சைலன்ட் திருமணம் - சுவாரஸ்ய தகவல்கள்!

post image

இந்தியாவின் அடையாள நட்சத்திரங்களில் ஒருவராக் ஜொலித்தவர் நீரஜ் சோப்ரா. ஈட்டி எறிதலில் தனக்கான முத்திரையைப் பதித்து, ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கம் வாங்கிக் கொடுத்த தங்க மகன். அவருக்கு திருமணமா... என்றக் கேள்விகள் வலைதளங்களில் வைரலாவதற்கு முன்பே திருமணம் நடந்து முடிந்து, தம்பதிகள் ஹனிமூன் சென்றுவிட்டார்கள். இப்படி அவசர அவசரமாக திருமணம் நடக்கக் காரணம் என்ன? மணமகள் யார்? இது காதல் திருமணமா? உள்ளிட்டப் பலக் கேள்விகள் சமூக வலைதளங்களில் வலம் வந்தது.

நீரஜ் சோப்ரா - ஹிமானி மோர் திருமணம்

நீரஜ் சோப்ராவின் திருமணம்!

அப்போதுதான் நீரஜ் சோப்ரா தன் சமூக வலைதளப்பதிவில், ``என் குடும்பத்துடன் வாழ்க்கையின் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறேன். இந்த தருணத்திற்கு எங்களை ஒன்றாகக் கொண்டு வந்த ஒவ்வொரு ஆசீர்வாதத்திற்கும் நன்றி. அன்பால் பிணைக்கப்பட்டு, எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்போம்" எனக் குறிப்பிட்டு தன் திருமணப் புகைப்படங்களைப் பதிவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து மணமகள் பெயர் ஹிமானி மோர் என்பது தெரியவந்தது.

இந்தத் திருமணம் தொடர்பாகப் பேசிய நீரஜ் சோப்ராவின் மாமா சுரேந்திர சோப்ரா, ``நீரஜ் சோப்ரா தன் தனிப்பட்ட வாழ்க்கையை மிகவும் ரகசியமாக வைத்திருக்கவே விரும்புகிறார்.

அதனால், திருமணம் நெருங்கிய உறவினர்களை மட்டும் அழைத்து நடத்தப்பட்டது. திருமணம் நடத்தி வைக்க வந்த பண்டிட்-க்குக் கூட, அவர் திருமண நிகழ்ச்சிக்கு வரும்வரை நீரஜ் சோப்ராதான் மணமகன் என்பது தெரியாது. அவரின் நெருங்கிய பல நண்பர்களுக்கும் திருமணம் தொடர்பான செய்திகள் கூறப்படவில்லை.

காதலில் விழுந்த நீரஜ் சோப்ரா!

நீரஜ் சோப்ராவைப் போலவே, ஹிமானி மோரும் டென்னிஸ் விளையாட்டு வீராங்கனைதான். டெல்லி பல்கலைக்கழகத்தின் மிராண்டா ஹவுஸில் Political science படித்து முடித்திருக்கிறார். பின்னர், தென்கிழக்கு லூசியானா பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மேலாண்மை படிக்க அமெரிக்கா சென்றார். அங்கு அவர் பிராங்க்ளின் பியர்ஸ் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மற்றும் உடற்தகுதி நிர்வாகத்தில் எம்.பி.ஏ பட்டம் பெற்றார். அமெரிக்காவில்தான் நீரஜ் சோப்ரா ஹிமானி மோரை சந்தித்திருக்கிறார். அப்போதே இருவரும் காதல்வயப்பட்டிருக்கிறார்கள்.

நீரஜ் சோப்ரா - ஹிமானி மோர்

அதைத் தொடர்ந்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து வைத்திருக்கிறோம். அவர்களின் திருமணம் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் திட்டமிடப்பட்டது. இவ்வளவு குறுகிய காலத்தில் திருமணம் நடந்து முடிந்ததற்கு காரணம் 2028 லாஸ் ஏஞ்சல்ஸில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக்தான். ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள தயாராகும் நீரஜ் சோப்ரா, அதுவரைக்குமான பயிற்சித் திட்டமிடல்களை, பல நிகழ்ச்சி நிரல்களை வைத்திருக்கிறார். 2028 ஒலிம்பிக்குக்குப் பிறகு திருமணம் செய்துகொள்வதாகப் பேச்சு எழுந்தபோது இருவீட்டாரும் அதற்கு சம்மதிக்கவில்லை. அதனால், ஜனவரிமாதம் அவருக்கு எந்த நிகழ்ச்சிகளும் இல்லை என்பதை அறிந்து அவசர அவசரமாக திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

ஒரு ரூபாய் மட்டுமே அதிஷ்டக்காசு!

இந்தத் திருமணம் மூன்று நாள் நிகழ்வாக ஜனவரி 14 முதல் 16 வரை சிம்லாவில் நடந்தது. திருமணத்திற்கு முந்தைய சடங்குகளுக்காக, ஹிமானி மோர் நீரஜ் சோப்ராவின் கிராமத்துக்கு வந்திருந்தார். திருமண விழாவில் விருந்தினர் தங்கள் செல்போன்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. நீரஜ் சோப்ரா பெண் வீட்டாரிடமிருந்து எந்த வரதட்சணையும் பெறவில்லை. அதிர்ஷ்டத்தின் அடையாளமாக நீரஜ் சோப்ரா, ஹிமானியின் தந்தையிடமிருந்து ஒரு ரூபாயை மட்டுமே வாங்கிக்கொண்டார். இப்போது தம்பதிகள் ஹனிமூனுக்காக இந்தியாவைவிட்டு வெளியேறிவிட்டனர். அவர்கள் இருவரும் தங்கள் திருமணத்தை ரகசியமாக வைத்திருக்கவே விரும்பினார்கள். நாங்களும் அதை அப்படியே வைத்திருக்கிறோம்" என்றார்.

நீரஜ் சோப்ரா - ஹிமானி மோர் திருமணம்

நீரஜ் சோப்ராவின் மனைவி ஹிமானி மோர் ஐசன்பெர்க் மேலாண்மை பள்ளியில் முதுகலைப் பட்டம் படித்து வருகிறார் என்றும், மாசசூசெட்ஸில் உள்ள ஆம்ஹெர்ஸ்ட் கல்லூரியில் உதவியாளராக பணியாற்றி வருகிறார் என்றும் அங்கு பெண்கள் டென்னிஸ் அணியை நிர்வகிக்கிறார் என்றும் தகவல்கள் கூறப்படுகிறது. நீரஜ் சோப்ராவும் ஹிமானி மோரும் தற்போது அமெரிக்காவில் இருப்பதாகவும், அவர்கள் நாடு திரும்பியதும் ஒரு பிரமாண்டமான வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

`பவதாரணி கல்யாணத்துல, `சாதிச்சிட்டீங்க’ன்னு சொன்னார் ராஜா சார்..!' - சாதகப்பறவைகள் சங்கர் Exclusive

`தன்னோட கல்யாணத்துல, இவர் இசைக்குழுவோட கச்சேரிதான் வைக்கணும்னு பவதாரிணியே தன் அப்பா இளையராஜாகிட்ட சொன்னாங்களாம்.’`காலம் சென்ற பின்னணிப்பாடகர் ஷாகுல் அமீது மகளோட கல்யாணத்துக்கு இவர் இசைக்குழுவோட கச்சேர... மேலும் பார்க்க

What to watch on Theatre: குடும்பஸ்தன்,பாட்டல் ராதா, ஹவுஸ் கீப்பிங் - இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

குடும்பஸ்தன் (தமிழ்)குடும்பஸ்தன் படத்தில்...நக்கலைட்ஸ் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன், குரு சோமசுந்தரம், ஆர், சுந்தரராஜன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'குட... மேலும் பார்க்க

Rakesh Rosha: ``தென்னிந்தியத் திரைத்துறை இன்னும் முன்னேறவே இல்லை"- பாலிவுட் இயக்குநர் ராகேஷ் ரோஷன்!

இந்தியத் திரைப்படத் துறை என்றாலே அது பாலிவுட்தான் என்ற பிம்பம் ஒருகாலத்தில் இருந்தது. பாலிவுட்தான் பெரும் பட்ஜெட் படங்கள்... புதிய தொழில்நுட்பப் பயன்பாடு என இந்திய சினிமாவை காப்பாற்றுகிறது என்றெல்லாம்... மேலும் பார்க்க

சென்னையில் களைகட்டிய காணும் பொங்கல்... மக்கள் வெள்ளத்தில் சுற்றுலாத்தலங்கள்.. | Photo Album

காணும் பொங்கலன்று சென்னை சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம்காணும் பொங்கலன்று சென்னை சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம்காணும் பொங்கலன்று சென்னை சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம்காணும் பொங்கலன்று சென்னை ச... மேலும் பார்க்க

Vanitha Vijayakumar: `40 வயதில் குழந்தை...' காதல், காமெடி காட்சிகளுடன் வெளியானது MRS & MR Teaser!

நடிகை வனிதா விஜயகுமார் நடித்து - தயாரித்துள்ள திரைப்படம் மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர். இந்த படத்தில் நடன இயக்குனர் ராபர்ட் இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். பாத்திமா பாபு, செஃப் தாமு, ஷகீலா, உள்ளிட்ட பலர் முக்... மேலும் பார்க்க

David Lynch: `ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட மூன்று படங்கள்'; இயக்குநர் டேவிட் லிஞ்ச் மரணம்!

ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட மூன்று திரைப்படங்கள், சிலப் படங்களின் குணச்சித்திர நடிகர், சிலப் படங்களின் இசையமைப்பாளர் எனப் பல்வேறு திறமைகளுடன் வலம் வந்த இயக்குநர் டேவிட் லிஞ்ச், பல வருட புகை... மேலும் பார்க்க