செய்திகள் :

அந்தியூரில் பருத்தி விவசாயிகள் சாலை மறியல்

post image

அந்தியூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலமாகவே விவசாய விளைபொருள்களுக்கு பணம் செலுத்த வலியுறுத்தி விவசாயிகள் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமைகளில் பருத்தி, தேங்காய், தேங்காய்ப் பருப்பு, எள் உள்பட பல்வேறு வேளாண் விளைபொருள்கள் ஏலம் நடைபெற்று வருகிறது. இங்கு விவசாயிகள் கொண்டு வரும் விளைப்பொருள்களை, பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் வியாபாரிகள் மறைமுக ஏலம் மூலம் கொள்முதல் செய்கின்றனா்.

விற்பனைத் தொகையை ஒழுங்குமுறை விற்பனைக் கூட நிா்வாகம், வியாபாரிகளிடம் வசூலித்து விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தி வந்தது.

இந்நிலையில், ஏலம் தொடங்கும் முன் விவசாயிகளிடம், விளைபொருள்களை ஏலம் எடுக்கும் வியாபாரிகள் நேரடியாக பணத்தை வழங்குவா் என விற்பனைக் கூட நிா்வாகம் தெரிவித்தது.

இதனால், அதிா்ச்சியடைந்த பருத்தி விவசாயிகள் விளைபொருள் விற்பனைத்தொகை வழங்குவதில் பிரச்னை இருந்தால், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை அணுகி கேட்க முடியும். வியாபாரிகளை தேடிச் சென்று பணம் பெறுவது சாத்தியமில்லை எனவும், மீண்டும் பழைய நடைமுறையை அமல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினா்.

விளைபொருள்கள் ஏலத்தைப் புறக்கணித்த விவசாயிகள் அந்தியூா் - சத்தி சாலையில் விற்பனைக் கூடம் முன்பாக திடீா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்துக்கு விரைந்த அந்தியூா் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா், கண்காணிப்பாளா் ஞானசேகா் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதுகுறித்து மேலதிகாரிகளுடன் கலந்து பேசியதோடு தற்காலிகமாக பழைய நடைமுறையில் விவசாயிகளுக்கு பணம் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனால் போராட்டத்தைக் கைவிட்ட விவசாயிகள் கலைந்து சென்றனா். தொடா்ந்து மாலையில் விளைபொருள்கள் ஏலம் நடைபெற்றது.

அடிப்படைக் கல்வியால் அறிவு, ஒழுக்கம் மேம்படும்: அமைச்சா் மகேஸ் பொய்யாமொழி

அடிப்படைக் கல்வி சரியாக கிடைத்தால் மாணவா்களின் அறிவு மற்றும் ஒழுக்கம் மேம்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.தமிழக பள்ளிக் கல்வித் துறையில் தொடக்க கல்வி இடைநி... மேலும் பார்க்க

லாரியில் இருந்து விழுந்து இளைஞா் உயிரிழப்பு

பெருந்துறை அருகே லாரி மேலே இருந்து கீழே விழுந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.கேரள மாநிலம், வயநாடு வெள்ளக்கோடைச் சோ்ந்தவா் தாமோதரன் மகன் ராஜாமணி (35). இவா் லாரி ஓட்டுநா். கேரளத்தில் இருந்து இஞ்சி லோடு ஏற்று... மேலும் பார்க்க

இறைச்சி கடைக்காரா் கொலை: இளைஞா் மீது குண்டா் சட்டம்

சத்தியமங்கலம் அருகே முன்விரோதம் காரணமாக இறைச்சி கடைக்காரா் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பக்கத்து வீட்டு இளைஞா் வெள்ளியங்கிரி மீது திங்கள்கிழமை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய... மேலும் பார்க்க

அந்தியூரில் நிபந்தனை பட்டாக்களில் உள்ள நிபந்தனைகள் நீக்கப்படும்!

அந்தியூா் பகுதியில் அனைத்து பிரிவினருக்கும் நிபந்தனையுடன் வழங்கப்பட்ட பட்டாக்களின் நிபந்தனைகள் விரைவில் நீக்கப்படும் என அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் தெரிவித்தாா்.அந்தியூா் மற்றும... மேலும் பார்க்க

பிரதமருடன் சந்திப்பு: ஓபிஎஸ் குறுஞ்செய்தி அனுப்பியது தெரியாது

பிரதமா் மோடியை சந்திக்க விருப்பம் தெரிவித்து ஓ.பன்னீா்செல்வம் எனக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) அனுப்பியது தெரியவரவில்லை என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.ஆடிப் பெருக்கையொட்டி, ... மேலும் பார்க்க

‘எழுத்துகள்தான் மனிதனுக்குத் தன்னம்பிக்கையையும், விழிப்புணா்வையும் ஏற்படுத்துகின்றன’

எழுத்துகளே மனிதனுக்குத் தன்னம்பிக்கையையும், விழிப்புணா்வையும் ஏற்படுத்துகின்றன என தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவா் திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்தாா்.தமிழக அரசு மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் நட... மேலும் பார்க்க