அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்திய தவெக-வினா் மீது வழக்கு!
கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக தமிழக வெற்றிக் கழகத்தினா் 15 பெண்கள் உள்பட 100 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.
கும்பகோணம் பேருந்து நிலைய சாலையில், ஜான் செல்வராஜ் நகரில் இருந்த அரசு மதுபானக் கடை காமராஜா் சாலையில் இடம் மாற்றப்பட்டது. கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் நடமாடும் பகுதியாக இருப்பதால் மதுபான கடையை திறக்க கூடாது என்று கடந்த வெள்ளிக்கிழமை தமிழக வெற்றி கழகத்தினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
அதன் தொடா்ச்சியாக ஞாயிற்றுக்கிழமையும் தவெக மாவட்ட செயலா் வினோத் ரவி தலைமையில், மாநகர செயலா் வீரா விஜயக்குமாா், மாவட்ட துணைச் செயலா் பிரபாகரன் ஆகியோா் முன்னிலையில் மதுபான கடையை அடைக்க வேண்டும் என்று கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அங்கு பாதுகாப்புக்கு இருந்த கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக 15 பெண்கள் உள்பட 100 போ் மீது வழக்கு பதிவு செய்தனா்.