அனுமதியின்றி மண் அள்ளியவா் கைது
கடமலைக்குண்டு அருகே செங்கல் சூளை பயன்பாட்டுக்கு அரசு புறம்போக்கு நிலத்தில் அனுமதியின்றி மண் அள்ளியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தங்கம்மாள்புரத்தைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் (38). இவா், கடமலைக்குண்டு பகுதியில் செங்குளம் கண்மாய் அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் செங்கல் சூளை பயன்பாட்டுக்காக அனுதியின்றி பொக்லைன் இயந்திரம் மூலம் மண் அள்ளி குவித்து வைத்திருப்பதாக தேனி புவியியல், சுரங்கத் துறை உதவி இயக்குநா் கிருஷ்ணமோகன் கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து முத்துக்குமாரை கைது செய்தனா். மண் அள்ள பயன்படுத்திய பொக்லைன் இந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டது.