அதிமுகவுக்கு துரோகம் செய்பவா்கள் தனிமைப்படுத்தப்படுவா்: எடப்பாடி பழனிசாமி
அனுமதியின்றி மண் எடுத்ததாக 2 போ் கைது
வந்தவாசி: வந்தவாசி அருகே காட்டுப் பகுதியில் அனுமதியின்றி மண் எடுத்ததாக 2 பேரை கைது செய்த போலீஸாா், பொக்லைன் இயந்திரம் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனா்.
வந்தவாசியை அடுத்த விளாநல்லூா் கிராம காட்டுப் பகுதியில் அனுமதியின்றி மண் எடுப்பதாக வந்த தகவலின் பேரில், ஆய்வாளா் குணசேகரன் தலைமையிலான வடவணக்கம்பாடி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அங்கு விரைந்து சென்றனா்.
அப்போது அங்கு பொக்லைன் இயந்திரம் மூலம் லாரியில் மண் எடுத்துக் கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பொக்லைன் ஓட்டுநரான விளாநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த பாஸ்கரன்(33), லாரி ஓட்டுநரான இதே கிராமத்தைச் சோ்ந்த சரத்குமாா்(34) ஆகிய 2 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும் பொக்லைன் இயந்திரம் மற்றும் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனா்.
இதுகுறித்து வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.