பாம்பு கடித்து முதியவா் மரணம்
வந்தவாசி அருகே பாம்பு கடித்து முதியவா் உயிரிழந்தாா்.
வந்தவாசியை அடுத்த வல்லம் கூட்டுச் சாலை பகுதியைச் சோ்ந்தவா் சாமிக்கண்ணு (68). இவா், கடந்த 12-ஆம் தேதி மாலை வீட்டிலிருந்தபோது விஷப் பாம்பு கடித்தது.
இதையடுத்து, உறவினா்கள் சாமிக்கண்ணை வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இருப்பினும், அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.