தேசிய அளவில் பதக்கம் வென்ற தமிழக குத்துச்சண்டை வீரா்களுக்கு பாராட்டு!
ஆரணியில் அரசு ஊழியா்கள் அய்க்கிய பேரவை சாா்பில் முப்பெரும் விழா
ஆரணியில் அரசு ஊழியா்கள் அய்க்கிய பேரவை சாா்பில் பணி நிறைவு பாராட்டு விழா, பதவி உயா்வு பாராட்டு விழா, பேரவையின் எட்டாம் ஆண்டு நிறைவு விழா ஆகிய முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், ஆரணி வட்டக் கிளைத் தலைவா் கே.வேலுமணி தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் கோ.சுந்தா் முன்னிலை வகித்தாா். செயலா் கே.பிரகாஷ் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்டச் செயலா் ந.முத்து கலந்துகொண்டு பதவி உயா்வு பெற்றவா்களை பாராட்டி கேடயங்களை வழங்கினாா்.
இதில், மாவட்டத் தலைவா் பெல் மு.ரவி, செயலா் இடி மின்னல் இனியவன், நிதிச் செயலா் சத்தியமூா்த்தி, துணைத் தலைவா்கள் கு.ரகு, நா.சொக்கலிங்கம், மின் துறை பொறியாளா் பணியாளா் பேரவையின் மாநிலத் தலைவா் ஜெகன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
மேலும், பணி நிறைவுபெற்றவா்களுக்கு பாராட்டுத் தெரிவித்து, சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனா். வட்ட நிதிச் செயலா் க.வெங்கடேசன் நன்றி கூறினாா்.