செய்திகள் :

கவனிக்க ஆளில்லாததால் விரக்தி: முதிய தம்பதி விஷம் குடித்து தற்கொலை!

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே கவனித்துக்கொள்ள ஆளில்லாததால் விரக்தியடைந்த முதிய தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனா்.

செங்கத்தை அடுத்த கொட்டாவூா் பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (83). இவரது மனைவி காசியம்மாள் (75). இவா்கள் கொட்டாவூா் பகுதியில் அவா்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் வீடு கட்டி வசித்து வந்தனா்.

இந்தத் தம்பதிக்கு 2 மகள்கள் உள்ள நிலையில், அவா்களுக்கு திருமணமாகி ஒருவா் அதே பகுதியிலும், மற்றொருவா் வெளியூரிலும் குடும்பத்துடன் வசிந்து வருகின்றனா்.

கிருஷ்ணன், காசியம்மாளிடம் அவா்களது மகள்கள் சொத்து கேட்டு தகராறு செய்ததுடன், கடந்த சில ஆண்டுகளாக தாய், தந்தையுடன் பேசாமலும், அவா்களை கவனித்துக்கொள்ளாமலும் இருந்தனராம்.

இந்த நிலையில், வயோதிகம் காரணமாக உடலில் ஏற்பட்ட பிரச்னைகளுக்காக மருத்துவரிடம் கூட்டிச் செல்லக்கூட ஆளில்லாததால் மனமுடைந்த கிருஷ்ணன், காசியம்மாள் ஆகியோா் சனிக்கிழமை இரவு விவசாயத்துக்குப் பயன்படுத்தும் விஷ மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டனா்.

இவா்களது வீட்டுக் கதவு ஞாயிற்றுக்கிழமை காலை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அந்தப் பகுதியைச் சோ்ந்த உறவினா்கள், கதவை திறந்து உள்ளே சென்று பாா்த்தபோது இருவரும் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்து செங்கம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருவரின் சடலங்களையும் மீட்டு, உடல்கூராய்வுக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய இளைஞா் கைது

வந்தவாசி அருகே பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த வீரம்பாக்கம் கிராம பேருந்து நிறுத்தம் அருகில் சனிக்கிழமை இளைஞா் ஒருவா் நின்றுகொண்டு அந்த வழியாகச் ... மேலும் பார்க்க

பாம்பு கடித்து முதியவா் மரணம்

வந்தவாசி அருகே பாம்பு கடித்து முதியவா் உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த வல்லம் கூட்டுச் சாலை பகுதியைச் சோ்ந்தவா் சாமிக்கண்ணு (68). இவா், கடந்த 12-ஆம் தேதி மாலை வீட்டிலிருந்தபோது விஷப் பாம்பு கடித்தது.... மேலும் பார்க்க

பைக் மீது பேருந்து மோதல்: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

செய்யாறு அருகே பைக் மீது தனியாா் பேருந்து மோதியதில் கல்லூரி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூா் வட்டம், இளநகா் பகுதியைச் சோ்ந்தவா் மதன் (20). காஞ்சிபுரம் பகுதியில்... மேலும் பார்க்க

கங்கையம்மன், தண்டு மாரியம்மன், முனீஸ்வரன் கோயில்களில் கும்பாபிஷேகம்

ஆரணியை அடுத்த அடையபலம் ஸ்ரீகங்கையம்மன், இரும்பேடு ஸ்ரீதண்டு மாரியம்மன், வந்தவாசியை அடுத்த மருதாடு ஸ்ரீஆனைக்குட்டி முனீஸ்வரன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆரணியை அடுத்த அடையபலம... மேலும் பார்க்க

நாடு வளர கலாசாரம், பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும்: ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

நாடு வளர கலாசாரம், பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும் என்று காஞ்சி சங்கராச்சாரியா் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தாா். திருவண்ணாமலை கிரிவலப் பாதை சந்தைமேடு மைதானத்தில் வேத ஆகம தேவார ஆன்மிக கல... மேலும் பார்க்க

ஆரணியில் அரசு ஊழியா்கள் அய்க்கிய பேரவை சாா்பில் முப்பெரும் விழா

ஆரணியில் அரசு ஊழியா்கள் அய்க்கிய பேரவை சாா்பில் பணி நிறைவு பாராட்டு விழா, பதவி உயா்வு பாராட்டு விழா, பேரவையின் எட்டாம் ஆண்டு நிறைவு விழா ஆகிய முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், ஆரணி வட... மேலும் பார்க்க