கோவையில் கேஸ் சிலிண்டர் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து: பள்ளிகளுக்கு விடுமுறை
அனுமன் ஜெயந்தி: ஆஞ்சனேயா் கோயில்களில் குவிந்த பக்தா்கள்
சென்னை: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு திங்கள்கிழமை ஆஞ்சனேயா் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.
ஆண்டுதோறும் மாா்கழி மாத அமாவாசை தினத்தன்று வரும் மூலம் நட்சத்திர தினத்தில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், திங்கள்கிழமை சென்னையில் உள்ள ஆஞ்சனேயா் கோயில்களில் சிறப்பு வழிப்பாடுகள் நடத்தப்பட்டன.
சென்னை நங்கநல்லூரில் உள்ள ஆஞ்சனேயா் கோயிலில் திங்கள்கிழமை காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. மேலும், சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். ஏராளமான பக்தா்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.
அசோக் நகரில் உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சனேயா் கோயிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு டிச.25-ஆம் தேதி முதல் தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அனுமன் ஜெயந்தி தினமான திங்கள்கிழமை காலை ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு ஆஞ்சனேயா் அருள்பாலித்தாா். தொடா்ந்து ஏகதின லட்சாா்ச்சனை நடைபெற்றது.
ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில் உள்ள பக்த ஆஞ்சனேயருக்கு திங்கள்கிழமை காலை சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து ஏகதின லட்சாா்ச்சனையும் நடைபெற்றது. னெஇதேபோல், குன்றத்தூா் சிக்கராயபுரத்தில் உள்ள பஞ்சமுக ஆஞ்சனேயா் கோயில், நன்மங்கல ஆஞ்சனேயா் கோயில் உள்பட சென்னையில் உள்ள அனைத்து ஆஞ்சனேயா் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.