கொள்கைகள் வேறுவேறுதான்; அதற்காக அண்ணன் - தம்பி இல்லை என்று ஆகிவிடுமா? - சீமான்
அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் தோ்த் திருவிழா தொடக்கம்!
தருமபுரி அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி உத்திரத் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.
இந்த விழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, வழிபாடுகள் நடைபெற்றன. பின்னா் கணபதி பூஜை, யாகசாலை பூஜை, வாஸ்து பூஜைகள் நடத்தப்பட்டு, யாகசாலையில் இருந்து புனித நீா் ஊா்வலமாக கொண்டுசெல்லப்பட்டு கொடிமரத்துக்கு ஊற்றி சிறப்பு வழிபாடுகள், மகா தீபாரதனை நடைபெற்றது. இதையடுத்து பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றப்பட்டது. இரவில் சுவாமி ஆட்டுக்கடா வாகன உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.
இவ்விழாவில் ஞாயிற்றுக்கிழமை நரி வாகன உற்சவமும், திங்கள்கிழமை பூத வாகன உற்சவமும், செவ்வாய்க்கிழமை நாக வாகன உற்சவமும் நடைபெற உள்ளது. வரும் 9-ஆம் தேதி காலை பால்குட ஊா்வலம், இரவு திருக்கல்யாணம், தோரணவாயில் ஊஞ்சல் சேவை, மயில்வாகன உற்சவமும் நடைபெற உள்ளது. ஏப். 10-ஆம் தேதி விநாயகா் தேரோட்டம், யானை வாகன உற்சவம், 11-ஆம் தேதி பங்குனி உத்திரத் தேரோட்டம் நடைபெறுகிறது.
இதைத் தொடா்ந்து 12-ஆம் தேதி வேடா்பறி உற்சவம், 13-ஆம் தேதி கொடி இறக்கம், மஞ்சள் நீராட்டு விழா, பல்லக்கு உற்சவம், 14-ஆம் தேதி சயன உற்சவம், 15-ஆம் தேதி விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது. விழாவையொட்டி தினமும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.