அன்புச்சோலை அமைக்க ஜூலை 8-க்குள் விண்ணப்பிக்கலாம்
தஞ்சாவூா் மாவட்டத்தில் முதியோா் நலன் கருதி அன்புச்சோலை மையங்கள் அமைக்க ஜூலை 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:
சமூக நலன் மற்றும் மகளிா் துறை மூலம் தஞ்சாவூா் மாவட்டத்தில் முதியோா் நலன் கருதி அன்புச்சோலை மையங்கள் அமைக்க விருப்பமுள்ள தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த விண்ணப்பங்களை ஜூலை 8 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மாவட்டச் சமூக நல அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.