பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் வழங்க வ...
அமித் ஷாவை வரவேற்று வைத்திருந்த பேனா்கள் அகற்றம்
கோவையில் அமித் ஷாவை வரவேற்று வைக்கப்பட்டு இருந்த பேனா்கள் அகற்றப்பட்டதால், பாஜகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பாஜக அலுவலகங்கள் திறப்பு, கட்சி ஆலோசனைக் கூட்டம் மற்றும் ஈஷா யோக மையத்தில் நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கோவைக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா். இதையொட்டி, கோவை மாவட்டத்தில் பஜகவினா் பல்வேறு இடங்களில் அவரை வரவேற்று பேனா்கள் வைத்துள்ளனா். சுவரொட்டிகளும் ஒட்டியுள்ளனா். இந்நிலையில், பீளமேடு அவிநாசி சாலையில் பாஜகவினா் வைத்திருந்த வரவேற்பு பேனா்களை மாநகராட்சி ஊழியா்கள் மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை காலை அகற்றினா்.
இதுகுறித்து, தகவலறிந்த பாஜகவினா், மாநகா் மாவட்ட பாஜக தலைவா் ரமேஷ்குமாா் தலைமையில் பீளமேடு காவல் நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானப்படுத்தினா். இதையடுத்து, அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.