அமெரிக்கா: ஹிந்து கோயிலில் தாக்குதல்
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் சினோ ஹில்ஸ் பகுதியில் உள்ள சுவாமி நாராயணன் கோயில் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கோயிலின் சுவர்களில் `ஹிந்துக்கள் திரும்பிச் செல்லுங்கள்’ என்ற வாசகங்களுடன் எழுதியுள்ளனர்.
இதுகுறித்து, கோயிலை நிர்வகித்து வரும் பாப்ஸ் அமைப்பு கூறியதாவது, ``கலிபோர்னியாவில் மற்றொரு கோயிலும் அவமதிக்கப்பட்டுள்ளது. வெறுப்புக்கு எதிராக ஹிந்து சமூகம் உறுதியாக நிற்கிறது. வெறுப்பை அடியோடு பிடுங்க, கலிபோர்னியாவில் உள்ள சமூகத்துடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றுவோம்’’ என்று தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்துக்கு அமெரிக்காவில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த சில ஆண்டுகளில் 10 ஹிந்து கோயில்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகமும் கண்டனம் தெரிவித்து, இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் கூறியது.
இதையும் படிக்க:பான் மசாலா விளம்பரம்: ஷாருக்கான் உள்பட 3 நடிகர்கள் ஆஜராக நுகர்வோர் ஆணையம் உத்தரவு!