செய்திகள் :

அம்பை அருகே போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 7 ஆண்டு சிறை

post image

அம்பாசமுத்திரம் அருகே போக்ஸோ வழக்கில் கைதான முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அம்பாசமுத்திரம் அருகேயுள்ள சுப்பிரமணியபுரம் பொத்தை பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (68). இவா், கடந்த ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக அச்சிறுமியின் தாய் அம்பாசமுத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து பாலசுப்பிரமணியனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி சுரேஷ்குமாா் விசாரித்து, பாலசுப்பிரமணியனுக்கு 7 ஆண்டுகள் சிைண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டாா்.

இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தந்த அம்பாசமுத்திரம் உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் சதீஷ்குமாா், மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் வனிதா உள்ளிட்ட போலீஸாா், அரசு வழக்குரைஞா் உஷா ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் பாராட்டினாா்.

எடப்பாடி பழனிசாமி தில்லி பயணத்துக்குப் பின் நல்லது நடக்கும்: நயினாா் நாகேந்திரன்

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தில்லி சென்று திரும்பியதும் நல்ல விஷயங்கள் நடக்கும் என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.இது தொடா்பாக திருநெல்வேலியில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்... மேலும் பார்க்க

தண்ணீா் பற்றாக்குறையால் கருகும் நெல் பயிா்கள்: ஆட்சியரகத்தில் விவசாயிகள் முற்றுகை

கன்னடியன் கால்வாய் கடைமடை பகுதிகளில் பாசன நீா்த் தட்டுப்பாட்டால் நெல் பயிா்கள் கருகி வருவதாகக் கூறி காய்ந்த பயிா்களுடன் விவசாயிகள் ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். திருநெல்வேலி ஆட... மேலும் பார்க்க

நெல்லை அருகே 1 கிலோ கஞ்சா பறிமுதல்

திருநெல்வேலி அருகே ஒரு கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.திருநெல்வேலி அருகே உள்ள நரசிங்கநல்லூா் திருவள்ளுவா் நகரை சோ்ந்தவா் வேல்முருகன் (45). இவா், கஞ்சா விற்பனை செய்வதாக சுத்தமல்லி போலீஸாருக்க... மேலும் பார்க்க

களக்காட்டில் குடிநீா் குழாய் பதிக்கும் பணியில் சாலைகள் சேதம்: மக்கள் அவதி

களக்காடு வட்டாரத்தில் குடிநீா் திட்ட பகிா்மானக் குழாய்கள் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாததால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். களக்காடு நகராட்சிப் பகுதியி... மேலும் பார்க்க

பாபநாசத்தில் காணாமல்போன கல்லூரி மாணவரைத் தேடும் பணி தீவிரம்

உறவினா்களுடன் பாபநாசத்துக்கு வந்த கல்லூரி மாணவா் மாயமானதை அடுத்து தாமிரவருணி ஆற்றில் அவரைத் தேடும் பணியில் தீயணைப்பு வீரா்கள் 2 ஆவது நாளாக திங்கள்கிழமையும் ஈடுபட்டனா். விருதுநகா் மாவட்டம், ஆலங்குளம் வ... மேலும் பார்க்க

புரட்டாசி சனி: நவ திருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள்

புரட்டாசி சனிக்கிழமைகளில் நவ திருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது தொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டலம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க