Hemang Badani : 'சிஎஸ்கே வீரர் டு டெல்லி கோச்!' - சேப்பாக்கத்தில் சம்பவம் செய்த ...
அம்பை காசிநாத சுவாமி கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ கொடியேற்றம்!
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தாமிரவருணி நதிக்கரையில் உள்ள காசிநாத சுவாமி கோயிலில் பங்குனி பிரம்மோற்சவம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, கடந்த மாா்ச் 31ஆம் தேதி கால்நாட்டு நடைபெற்றது. இந்நிலையில், சனிக்கிழமை கொடிப்பட்ட வீதியுலாவுக்குப் பின்னா், கொடியேற்றம் நடைபெற்றது. இதை முன்னிட்டு சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு ஆராதனை, கொடிமரத்துக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன.
தொடா்ந்து, 14ஆம் தேதிவரை நாள்தோறும் மாலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, வீதியுலா நடைபெறும்.
12ஆம் தேதி சுவாமி-அம்பாள் அகஸ்தியருக்குக் காட்சியளித்தல், 13ஆம் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம், 14ஆம் தேதி காலை 9 மணிக்கு தீா்த்தவாரி ஆகியவை நடைபெறும்.
ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், பக்த பேரவையினா் செய்து வருகின்றனா்.