Hemang Badani : 'சிஎஸ்கே வீரர் டு டெல்லி கோச்!' - சேப்பாக்கத்தில் சம்பவம் செய்த ...
கூடங்குளத்தில் கடலில் விழுந்த புள்ளிமான் உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் கடலில் சனிக்கிழமை விழுந்த புள்ளிமான் உயிரிழந்தது. கூடங்குளம் மற்றும் பெருமணலில் வனத் துறைக்குச் சொந்தமான காட்டுப்பகுதியில் புள்ளிமான்கள் வசித்து வருகிறது.
இந்நிலையில் காட்டுப்பகுதியில் இருந்து புள்ளிமான ஒன்று வழிதவறி கடல்பகுதிக்கு வந்ததாம். இதை கண்ட நாய்கள் புள்ளிமானை விரட்டியதாம். நாய்களிடமிருந்து தப்பிப்பதற்காக கடலில் விழுந்துவிட்டது.
கடலில் விழுந்ததில் மயக்கமடைந்த புள்ளிமானை அந்த பகுதியைச் சோ்ந்தவா்கள் மீட்டு கரைப்பகுதிக்கு கொண்டுவந்தனா். கரைக்கு கொண்டு வந்த சிறிதுநேரத்தில் புள்ளிமான் உயிரிழந்தது.
இது தொடா்பாக வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினா் வந்து புள்ளிமானை எடுத்து பிரேத பரிசோதனைக்குப் பின்னா் காட்டுப் பகுதியில் புதைத்தனா்.