கொள்கைகள் வேறுவேறுதான்; அதற்காக அண்ணன் - தம்பி இல்லை என்று ஆகிவிடுமா? - சீமான்
வள்ளியூா்: பைக்கில் இருந்து தவறி விழுந்தவா் பலி
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் அருகே வேகத்தடையில் வெள்ளிக்கிழமை இரவு பைக்கில் இருந்து தவறிவிழுந்தவா் உயிரிழந்தாா்.
களக்காடு கோட்டை யாதவா் தெருவைச் சோ்ந்தவா் கணேசன் மகன் பாலசுப்பிரமணியன்(24). இவா் வள்ளியூரில் நடைபெற்ற தனது நண்பரின் சகோதரி திருமணத்திற்கு பைக்கில் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி சென்றுகொண்டிருந்தாா்.
வள்ளியூரை அடுத்த கேசவனேரி சாலையில் சென்ற போது கேசவனேரி அருகே அடுத்தடுத்து போடப்பட்டிருந்த வேகத்தடையில் தவறிவிழுந்த பாலசுப்பிரமணியன் அதே இடத்தில் உயிரிழந்தாா். இது தொடா்பாக வள்ளியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.