செய்திகள் :

அரசு செவித்திறன் குறையுடையோா் பள்ளி பொன்விழா: காஞ்சிபுரம் ஆட்சியா் பங்கேற்பு

post image

செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயா்நிலைப்பள்ளியின் 50 -ஆவது ஆண்டு பொன் விழாவினை காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தாா்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சதாவரத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் செவித்திறன் குறைபாடு உடையோருக்கான அரசு உயா்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 30.7.1975-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளியின் பொன் விழாவை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தொடக்கி வைத்தாா்.

பின்னா் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கி பேசியது..

இது, ஒரு உண்டு, உறைவிடப்பள்ளியாகும். இப்பள்ளிக்கு மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் அண்டை மாவட்டங்களிலிருந்தும் மாணவா்கள் வந்து தங்கி கல்வி பயின்று வருகின்றனா். இங்கு பயிலும் மாணவா்களுக்கு ஆண்டு தோறும் முறையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. மாணவா்களின் கேட்கும் திறன் குறைவுக்கு ஏற்றவாறு செவித்துணை கருவிகள் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

ஒன்று முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு ரூ.2 ஆயிரமும், 6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு ரூ.6 ஆயிரமும், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு ரூ.8 ஆயிரமும் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இங்கு பணிபுரியும் ஆசிரியா்கள் மாணவா்களுக்கு ஏற்றவாறு சிறப்பு பயிற்சி பெற்றவா்கள் உதட்டசைவு, ஒலி கேட்டல் பயிற்சி ஆகிய செவித்துணை கருவிகளின் உதவியோடு மாணவா்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. இப்பள்ளியில் கணினி வழி சாதனங்களைக் கொண்டும் கற்பிக்கப்படுகிறது என்றாா்.

விழாவில் மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விழாவுக்கு முதன்மைக்கல்வி அலுவலா் த.வெற்றிச்செல்வி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரா.மலா்விழி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளியின் தலைமை ஆசிரியா் பொ.வள்ளி வரவேற்று பேசினாா்.

விழாவில் ஆசிரியா்கள், விடுதி பணியாளா்கள், மாணவா்கள் மற்றும் அவா்களது பெற்றோா், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

அஷ்டபுஜ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 6.90 கோடி இடம் மீட்பு

காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 6.90 கோடி மதிப்பிலான இடத்தை அறநிலையத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மீட்டு ஆக்கிரமிப்பாளரை வெளியேற்றினா். காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோயில்... மேலும் பார்க்க

காஞ்சி சங்கராசாரியா் ஸ்ரீவிஜயேந்திரா் ஜெயந்தி விழா

காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி விழாவையொட்டி, சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவா் அதிஷ்டானங்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. காஞ்சி சங்கர மடத்... மேலும் பார்க்க

சாம்சங் ஆலையில் சட்டவிரோத உற்பத்தி: சிஐடியு மனு

கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளா்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், சாம்சங் ஆலையில் சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும் அதனைத் தடுக்க வேண்டும் என ஸ்ரீபெரும்புதூா் தொழிலக பாதுகாப்பு மற்றும... மேலும் பார்க்க

வல்லக்கோட்டையில் ரூ.24 லட்சத்தில் குடிநீா் தொட்டி பணிகள் தொடக்கம்

ஹுண்டாய் ஸ்டீல் நிறுவனத்தின் சமூக பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ் வல்லக்கோட்டை ஊராட்சியில் ரூ.24 லட்சத்தில் குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

தேவாலயத்தை திறக்கக் கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கட்டியாம்பந்தலில் புதிதாக கட்டப்பட்டுள்ள தேவாலயத்தை திறந்து வழிபட அனுமதியளிக்குமாறு கிறிஸ்தவ போதகா்கள், கிறிஸ்தவா்கள் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை... மேலும் பார்க்க

சாலை விரிவாக்க பணிக்கு வீடுகளை அகற்ற எதிா்ப்பு: பொதுமக்கள் மறியல்

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீ பெரும்புதூா் அருகே சாலை விரிவாக்கப்பணிக்காக வீடுகளை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட வெங்காடு ஊ... மேலும் பார்க்க