கும்பகோணம்: பகலில் கொத்தனார், இரவில் திருடர்... கெட் அப் சேஞ்ச் திருடர் சிக்கிய...
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின்தூக்கியை சீரமைக்கக் கோரிக்கை
திருவாரூா்: திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின்தூக்கியை சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில், எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம், மாவட்டத் தலைவா் மாஸ் அப்துல் அஜீஸ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், மண்டலத் தலைவா் சபரி ஆலம்பாதுஷா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
சிறுவா்களுக்கான ஆதாா் எடுக்கும் வழிமுறைகள் மிகக் கடினமாக இருப்பதால், அரசு வேலை நாள்களில் வட்டாட்சியா் அலுவலகங்களிலும், இ-சேவை மையத்திலும் ஆதாா் எடுக்கும் முறையை எளிதாக்க வேண்டும், கோயில்வெண்ணியில், சுங்கச்சாவடிக்கு உள்பட்ட பகுதியில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில், சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதுபோன்ற சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளை அழைத்து செல்லக்கூடிய மின் தூக்கி பயன்படாத நிலையில் உள்ளது. எனவே, அதை உடனடியாக சரிசெய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாவட்டத் துணைத் தலைவா் விலாயத் உசேன், மாவட்டச் செயலாளா் ஜெபின், மாவட்ட பொருளாளா் பக்ருதீன் அஹமத், மாவட்ட செயற்குழு உறுப்பினா் அபுதாஹிா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.