காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்
அரசு மருத்துவமனை கழிவறையில் நோயாளி தூக்கிட்டுத் தற்கொலை
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கழிவறையில் நோயாளி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே ரங்கப்பநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (52), கூலித்தொழிலாளி. கடந்த 14-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த அவா் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். அங்கிருந்தோா் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தகவல் அறிந்து சென்ற நல்லிபாளையம் போலீஸாா், ரமேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் கூறுகையில், மதுபோதையில் பெண் ஒருவரிடம் ரமேஷ் அத்துமீறி நடந்துகொண்டதாகவும், இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. நல்லிபாளையம் காவல் நிலையத்திலும் அவா்மீது புகாா்மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் விரக்தியில் இருந்த அவா் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளாா். குடும்பத்தினா் சிகிச்சைக்காக அவரை மருத்துவமனையில் சோ்த்த நிலையில், மனஉளைச்சலில் கழிவறைக்குச் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளாா் என்றனா்.