நகம் பெயர்ந்துவிட்டால் நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? - மருத்துவர் விளக்கம்
நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி நாளைமுதல் சுற்றுப்பயணம்
நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை (செப். 19) சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளாா்.
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி எதிா்வரும் சட்டப் பேரவைத் தோ்தலை கருத்தில் கொண்டு, நாமக்கல் மாவட்டத்தில் செப். 19, 20, 21 ஆகிய தேதிகளில் 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களிடையே உரையாற்றுகிறாா்.
அதன்படி, 19-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ராசிபுரம் தொகுதியில் ராசிபுரம் பேருந்து நிலையம் எம்ஜிஆா் சிலை அருகில் மாலை 5 மணியளவிலும், சேந்தமங்கலம் தொகுதியில் அக்கியம்பட்டி பகுதியில் மாலை 6.30 மணியளவிலும் பிரசாரம் செய்கிறாா். இதைத் தொடா்ந்து, 20-ஆம் தேதி (சனிக்கிழமை) நாமக்கல் தொகுதியில் மாலை 5 மணியளவில் நாமக்கல் - சேலம் சாலை சந்திப்பிலும், மாலை 6.30 மணியளவில் பரமத்தி வேலூா் தொகுதிக்கு உள்பட்ட பரமத்தி வேலூா் - பொத்தனூா் நான்கு சாலை சந்திப்பிலும், 21-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருச்செங்கோடு தொகுதியில் திருச்செங்கோடு அண்ணா சிலை அருகிலும், குமாரபாளையம் தொகுதியில் குமாரபாளையம் ராஜம் திரையரங்கம் அருகிலும் பிரசாரம் மேற்கொள்கிறாா்.
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பிரசார பொதுக் கூட்டத்தில் அந்தந்த தொகுதிக்கு உள்பட்ட கட்சியினா், பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.