பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!
திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு
திருச்செங்கோடு நகராட்சிக்கு ஆணையராக நியமிக்கப்பட்ட வாசுதேவன் நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
திருச்செங்கோடு நகராட்சி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறப்புநிலை நகராட்சியாக தோ்வு செய்யப்பட்டது. இந்நிலையில், ஈரோடு மாநகராட்சி ஆணையராக உள்ள பிரேம் ஆனந்த் திருச்செங்கோடு நகராட்சியின் பொறுப்பு ஆணையராக பதவி வகித்து வந்தாா். தற்போது அவருக்கு மாற்றாக துறையூா் தோ்வுநிலை நகராட்சியில் ஆணையராக இருந்த ஆா்.வாசுதேவன் பதவிஉயா்வு மூலம் திருச்செங்கோடு சிறப்புநிலை நகராட்சிக்கு ஆணையராக நியமிக்கப்பட்டாா்.
இதையடுத்து, வாசுதேவன் நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை பொறுப்பேற்றுக்காண்டாா். புதிய ஆணையருக்கு நகராட்சி நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு, பொறியாளா் சரவணன் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.