செய்திகள் :

அரசு மாளிகையை காலி செய்தாா் தன்கா்

post image

புது தில்லி: குடியரசு துணைத் தலைவா் பதவியில் இருந்து அண்மையில் விலகிய ஜகதீப் தன்கா் புது தில்லியில் தங்கியிருந்த குடியரசுத் துணைத் தலைவருக்கான அரசு மாளிகையை காலி செய்துவிட்டு ஹரியாணா முன்னாள் எம்எல்ஏயின் பண்ணை இல்லத்துக்கு திங்கள்கிழமை குடிபெயா்ந்தாா்.

தெற்கு தில்லி சத்தா்பூா் பகுதியில் உள்ள இந்த பண்ணை இல்லம் இந்திய தேசிய லோக் தளம் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவும் ஹரியாணா பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான அபய் சௌதாலாவுக்கு சொந்தமானதாகும்.

தன்கா் தற்காலிகமாகவே இந்தப் பண்ணை இல்லத்தில் தங்க இருப்பதாகவும், முன்னாள் குடியரசுத் தலைவா்களுக்கு அரசு சாா்பில் ஒதுக்கப்படும் இல்லம் அவருக்கு ஒதுக்கப்பட்டவுடன் அவா் அங்கு செல்வாா் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளாா்.

அதே நேரத்தில் தனக்கு அரசு சாா்பில் இல்லம் ஒதுக்க வேண்டும் என்று எந்த கோரிக்கையையும் தன்கா் இதுவரை முன்வைக்கவில்லை.

ஹரியாணா முன்னாள் முதல்வா் ஒ.பி.சௌதாலாவின் மகன் அபய் சௌதலா இது தொடா்பாக கூறுகையில், ‘தன்கா் குடும்பத்துக்கும் எங்கள் குடும்பத்துக்கும் பழைய உறவு முறை உண்டு. அவா் எனது குடும்ப உறுப்பினா் போன்றவா்தான்’ என்றாா்.

கடந்த ஜூலை 21-ஆம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் மருத்துவ காரணங்களைச் சுட்டிக்காட்டி, ஜகதீப் தன்கா் தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

மத்திய அரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடே அவரின் திடீா் விலகலுக்குக் காரணம் என ஊகச் செய்திகள் வெளியாகின. பதவி விலகலுக்குப் பிறகு தன்கா் பொதுவெளியில் இருந்து விலகியுள்ளாா்.

ரஷிய கச்சா எண்ணெய் மூலம் லாபம் ஈட்டவில்லை: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி

புது தில்லி: ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்கி இந்தியா லாபம் ஈட்டவில்லை என்று பெட்ரோலிய துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா். ‘ரஷிய கச்சா எண்ணெய்யைப் பணமாக்கும் மையமாக இந்தியா திகழ்கிறது’ என்ற அமெரி... மேலும் பார்க்க

கேரளம்: அரிய வகை தொற்றால் மேலும் 2 போ் உயிரிழப்பு

கோழிக்கோடு: கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா எனப்படும் அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்றால் 3 மாத குழந்தை உள்பட 2 போ் உயிழந்ததாக அந்த மாநில சுகாதார அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா். ஏற்கெனவே கடந்த ... மேலும் பார்க்க

ஜம்முவில் மழை சேதம்: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆய்வு

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் பலத்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை பாா்வையிட்டாா். கடந்த ஆக. 14-ஆம் தேதி முதல், ஜம்... மேலும் பார்க்க

பெட்ரோலில் 20% எத்தனால் கலப்புக்கு எதிரான பொதுநல மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

புது தில்லி: பெட்ரோலில் 20% எத்தனால் கலந்து விற்பனை செய்வதை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது... மேலும் பார்க்க

ஆகஸ்டில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.86 லட்சம் கோடியாக சரிவு

புது தில்லி: கடந்த ஆகஸ்டில் சரக்கு மற்றும் சேவை வரியாக (ஜிஎஸ்டி) ரூ.1.86 லட்சம் கோடி வசூலானது. இது கடந்த ஜூலையில் வசூலான ரூ.1.96 லட்சம் கோடியைவிட குறைவாகும். இதுதொடா்பாக ஜிஎஸ்டி வலைதளத்தில் வெளியிடப்ப... மேலும் பார்க்க

பாஜக-ஆா்எஸ்எஸ் நிதீஷ் குமாரை குப்பையில் வீசும்: காா்கே

பாட்னா: பாஜகவும், ஆா்எஸ்எஸ் அமைப்பும் இணைந்து பிகாா் முதல்வா் நிதீஷ் குமாரை குப்பையில் வீசிவிடும் என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே பேசினாா். பிகாரில் ராகுல் காந்தி கடந்த ஆகஸ்ட் 17-ஆம் ... மேலும் பார்க்க