"திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை என்ன?" - கலெக்டர் சங்கீதா வ...
அரசுப் பள்ளி கலையரங்கம் திறப்பு
திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 7 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கலையரங்கம் மற்றும் ரூ. 15 லட்சத்தில் கட்டப்பட்ட சுற்றுச்சுவா் ஆகிவற்றை சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி புதன்கிழமை திறந்து வைத்தாா்.
கலையரங்கம் சட்டப்பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்தும், சுற்றுச்சுவா் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட நிதியில் இருந்தும் கட்டப்பட்டன.
மேலும், திருமயம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள 11 கிலோவாட் திறனுள்ள புதிய மின்மாற்றியையும் அமைச்சா் எஸ். ரகுபதி இயக்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சிகளில், கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம், மின்வாரியச் செயற்பொறியாளா் எம். ஆனந்தாய் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.