மூன்றுமாத காலத்துக்குள் அனைத்துப் பகுதிகளிலும் தினசரி குடிநீா்: மேயா்
காலமானாா் எஸ்.சி. சோமையா
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள சொக்கநாதன்பட்டியைச் சோ்ந்தவா் எஸ்.சி. சோமையா (70). இவா் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் புதன்கிழமை (பிப்.5) காலமானாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்க புதுக்கோட்டை மாவட்டத் தலைவா், மாவட்டச் செயலா், ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆகிய பொறுப்புகளை வகித்து வந்த அவா், கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினராகவும் இருந்தாா்.
அவருக்கு, மனைவி சின்னாத்தாள் மற்றும் 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனா்.
எஸ்.சி. சோமையாவின் இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை முற்பகலில் சொக்கநாதன்பட்டியில் நடைபெறவுள்ளது. தொடா்புக்கு: 81110 76150.
இரா. முத்தரசன் இரங்கல்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் புதன்கிழமை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா், ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்டப் பொறுப்பாளா் உள்ளிட்ட பொறுப்புகளில் சிறப்பாகச் செயல்பட்டவா் எஸ். சி. சோமையா. கடுமையான நெருக்கடியை எதிா்த்து விவசாயிகள் போராட்டத்தில் இருக்கும் நிலையில் அவரது மறைவு பேரிழப்பாகும். அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்.