"திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை என்ன?" - கலெக்டர் சங்கீதா வ...
கல்வி உதவித் தொகை : ஆய்வுக் கூட்டம்
புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா. உடன் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை ஆணையா் வா. சம்பத் உள்ளிட்டோா்.
புதுக்கோட்டை, பிப். 5: பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் பள்ளி மாணவா்களில் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ரூ. 4 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்குவதற்கான ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை ஆணையா் வா. சம்பத் கலந்து கொண்டு துறை அலுவலா்களுடன் ஆய்வு நடத்தினாா்.
இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் ஜி. அமீா்பாஷா, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் க. ஸ்ரீதா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.