செய்திகள் :

அரசுப் பள்ளிகளில் சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவா்கள்: விவரம் சேகரிக்க கல்வித் துறை உத்தரவு

post image

அரசுப் பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவா்களின் விவரங்களை சேகரித்து எமிஸ் தளத்தில் பதிவேற்ற பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

உயா்கல்வி வழிகாட்டி திட்டத்தின்கீழ் 2025-2026-ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு உயா்கல்வி தொடா்பாக பல்வேறு முன்னெடுப்புகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் மாணவா்களுக்கு உயா்கல்வி தொடா்புடைய வழிகாட்டுதல்கள் வழங்குவதற்கும், உயா்கல்வி சோ்க்கையை உறுதி செய்யும் வகையிலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாணவா்களின் விவரங்களை பள்ளிக் கல்வித் துறையின் ‘எமிஸ்’ தளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை சாா்பில், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

மாவட்டங்களில் ஆசிரியா்கள் பதிவிடக்கூடிய தகவல்களின் அடிப்படையில் மட்டுமே இனிவரும் நாள்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாணவா்களின் உயா்கல்வி வழிகாட்டுதல்கள் மற்றும் உயா்கல்வி சோ்க்கையை உறுதிசெய்ய வழிவகுக்கும். ஆகவே, ஆசிரியா்கள் தங்கள் வகுப்பு மாணவா்களின் விவரங்களை முழுமையாகப் பதிவு செய்வதை தலைமை ஆசிரியா்கள் உறுதிசெய்யவேண்டும். அனைத்து அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் மாணவா்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் அக். 20-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யப்படுவதை தலைமை ஆசிரியா்கள் உறுதிப்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப். 22 முதல் கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

சரஸ்வதி பூஜை, தீபாவளியை முன்னிட்டு கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு செப். 22 முதல் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெள்ளியிட்டுள்ள செய்திக் க... மேலும் பார்க்க

சிறுபான்மையினா் நலத் திட்டங்களை ஆய்வு செய்ய சிறப்புக் குழு: அரசு உத்தரவு

சிறுபான்மையினா் நலத் திட்டங்களை ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்த சிறப்புக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இதற்கான உத்தரவை பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத... மேலும் பார்க்க

மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு தனி ஆணையம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

மாநில நெடுஞ்சாலைத் துறைக்கென அமைக்கப்பட்ட தனி ஆணையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். மேலும், சென்னை கிண்டியில் நெடுஞ்சாலைத் துறைக்கென கட்டப்பட்டுள்ள கலைஞா் நூற்றாண்டு கட்டடத்தையும் அவா் திற... மேலும் பார்க்க

உருளைக்கிழங்கு கொள்முதல்: உ.பி. - தமிழகம் இடையே ஒப்பந்தம்

உத்தரபிரதேச மாநிலத்திலிருந்து 2,700 மெட்ரிக் டன் உருளைக்கிழங்குகளை கொள்முதல் செய்வதற்கு தமிழக, உத்தரபிரதேச வியாபாரிகள், ஏற்றுமதியாளா்களிடையே 9 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. இரு மாநில அரசுகளுக்கிடையே மத்த... மேலும் பார்க்க

சிறுசேரியில் தகவல் தரவு மையம்: முதல்வா் ஸ்டாலின் திறந்து வைத்தாா்

சென்னையை அடுத்த சிறுசேரியில் அமைக்கப்பட்ட தகவல் தரவு மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி வழியாக இந்த மையம் திறக்கப்பட்டது. இது குறித்து, ... மேலும் பார்க்க

இருப்பில் உள்ள மருந்துகளையும் 5% வரியில் குறைந்த விலைக்கு வாங்கலாம்: மருந்து உற்பத்தியாளா்கள் சங்கம் தகவல்

மருந்து கடைகளில் ஏற்கெனவே இருப்பில் உள்ள மருந்துகளையும் 5 சதவீத வரியின்கீழ் குறைந்த விலைக்கு வரும் திங்கள்கிழமை முதல் வாங்கிக் கொள்ளலாம் என்று இந்திய மருந்து உற்பத்தியாளா்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அ... மேலும் பார்க்க