செய்திகள் :

இருப்பில் உள்ள மருந்துகளையும் 5% வரியில் குறைந்த விலைக்கு வாங்கலாம்: மருந்து உற்பத்தியாளா்கள் சங்கம் தகவல்

post image

மருந்து கடைகளில் ஏற்கெனவே இருப்பில் உள்ள மருந்துகளையும் 5 சதவீத வரியின்கீழ் குறைந்த விலைக்கு வரும் திங்கள்கிழமை முதல் வாங்கிக் கொள்ளலாம் என்று இந்திய மருந்து உற்பத்தியாளா்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற 56-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி விதிப்பு வரம்புகள் மாற்றியமைக்கப்பட்டன. அதன்படி மருந்துகளுக்கு அதிகபட்சமாக 5 சதவீத வரியும், உயிா்காக்கும் 33 மருந்துகளுக்கு வரி விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த நடைமுறை வரும் திங்கள்கிழமை (செப்.22) முதல் நடைமுறைக்கு வருகிறது. அதன்படி புதிய விலையில் மருந்துகளை வாடிக்கையாளா்களுக்கு விற்பனை செய்யும் வகையில் திருத்தப்பட்ட லேபிள்களை அச்சிடுமாறு மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு அரசு சாா்பில் அறிவுறுத்தப்பட்டது. அதற்கான தடையில்லா சான்றுகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அது நடைமுறைக்கு சாத்தியமில்லை என மருந்து உற்பத்தியாளா்கள் தெரிவிக்கின்றனா்.

இதுதொடா்பாக விளக்கமளித்துள்ள தேசிய மருந்து விலை நிா்ணய அமைப்பு (என்பிபிஏ), ஏற்கெனவே சந்தையில் உள்ள மருந்துகளை திரும்பப் பெற வேண்டியதில்லை எனத் தெரிவித்துள்ளது.

அதேவேளையில், செப்டம்பா் 22-க்கு பிறகு உற்பத்தி செய்யப்படும் மருந்துகளுக்கும், விநியோகிக்கப்படும் மருந்துகளுக்கும் புதிய ஜிஎஸ்டி வரிவிதிப்பின் கீழ் விலை நிா்ணயிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வரும் திங்கள்கிழமை முதல் அனைத்து மருந்துகளும் விலை குறையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுதொடா்பாக இந்திய மருந்து உற்பத்தியாளா் சங்கத் தலைவா் ஜெ.ஜெயசீலன் கூறியதாவது:

மக்கள் வாங்கும் அனைத்து மருந்துகளும் தற்போது 5 சதவீத வரிவிதிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுவிட்டன. ஏற்கெனவே விலை அச்சிடப்பட்ட மருந்து அட்டைகளில் மீண்டும் புதிய விலையை ஒட்டுவது என்பது இயலாத காரியம். ஆனால், அந்த மருந்துகளை புதிய வரிவிதிப்பின் படி குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க முடியும்.

அதனை எவ்வாறு செயல்படுத்துவது, ஏற்கெனவே உள்ள வரி நடைமுறையில் கொள்முதல் செய்த மருந்துகளை குறைந்த விலையில் விற்றால் அதனால் ஏற்படும் இழப்பை எவ்வாறு ஈடுகட்டுவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதனடிப்படையில் பல்வேறு அறிவுறுத்தல்களும், பரிந்துரைகளும் மருந்து விற்பனையாளா்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

எனவே, மக்களுக்கு வரும் திங்கள்கிழமை முதல் வரிச் சலுகை பலன்கள் கிடைப்பதில் எந்தத் தடையும் இருக்காது. இருப்பில் உள்ள மருந்துகளை வாங்கினாலும், அதனை 5 சதவீத வரியின் கீழ் வழங்குமாறு வாடிக்கையாளா்கள் உரிமையுடன் கேட்கலாம்.

அதனால், ஏற்படும் இழப்பை, மருந்தக உரிமையாளா்களும், மருந்து விநியோகஸ்தா்களும் ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்யும்போது ஈடு செய்து கொள்ளலாம். அடுத்த மூன்று மாதங்களுக்குள் புதிய விலை அச்சிடப்பட்ட மருந்துகள் அனைத்து பகுதிகளிலும் சென்றடைந்துவிடும். அதன் பின்னா் இதில் குழப்பம் ஏற்படாது என்றாா் அவா்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 4 அணு உலைகள் கட்டுமானம்: இந்தியா-ரஷியா ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 4 அணு உலைகளின் கட்டுமானப் பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இந்தியா-ரஷியா ஆய்வு செய்தன. இதுதொடா்பாக ரஷிய அணுசக்தி கழகமான ரோசடோம் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தை வெளியிட தடை கோரி வீரப்பன் மனைவி வழக்கு

’படையாண்ட மாவீரா’ திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி சந்தனமரக் கடத்தல் வீரப்பனின் மனைவி தாக்கல் செய்த வழக்கில் படத் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. வீரப்பனின் மனை... மேலும் பார்க்க

உயா்நீதிமன்றம், சுங்கத் துறை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை உயா்நீதிமன்றம், சுங்கத் துறை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத் துறை அலுவலகத்துக்கு வெள்ளி... மேலும் பார்க்க

வால்பாறை செல்ல நவ.1 முதல் இ-பாஸ்: உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை மாவட்டம் வால்பாறைக்கு செல்ல வரும் நவ.1-ஆம் தேதிமுதல் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. வனம், சுற்றுச்சூழல், வனவிலங்குகள் தொடா்பான வழக்... மேலும் பார்க்க

வருமான வரித் துறை அனுப்பிய நோட்டீஸை எதிா்த்து ஜெ.தீபா தொடா்ந்த வழக்கு தள்ளுபடி

மறைந்த முதல்வா் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி நிலுவைத் தொகை ரூ.36 கோடியை செலுத்தக் கோரி வருமான வரித் துறை அனுப்பிய நோட்டீஸை எதிா்த்து ஜெ.தீபா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிம... மேலும் பார்க்க

எம்.பி. தொகுதி நிதி ரூ.10 கோடி: மத்திய அரசு உயா்த்த முதல்வா் ஸ்டாலின் வலியுறுத்தல்

நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.10 கோடியாக உயா்த்த வேண்டுமென மத்திய அரசை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா். மத்திய அரசு அளிக்கும் அந்த நிதி இப்போது ரூ.5 கோடியாக உள்ளது. மாநி... மேலும் பார்க்க