நபோலியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை
நவராத்திரி விழாவுக்காக புறப்பட்ட சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன்
திருவனந்தபுரத்தில் வரும் 22ஆம் தேதி நடைபெறவுள்ள நவராத்திரி விழாவில் பங்கேற்கும் வகையில் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் புறப்பாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது.
மன்னா் கால பாரம்பரிய முறைப்படி, திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவிற்கு சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளி மலை குமாரசுவாமி, பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகியோரது விக்ரகங்கள் ஊா்வலகமாக திருவனந்தபுரம் கொண்டு செல்லப்படுவது வழக்கம். 10 நாள்கள் நவராத்திரி விழா நிறைவடைந்த பின்னா், விக்ரகங்கள் மீண்டும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்படும்.
மேள தாள முழக்கங்களுடன் கோயிலை விட்டு வெளியே வந்த அம்மனுக்கு தமிழக-கேரள போலீஸாா் அணிவகுப்பு மரியாதை செலுத்தினா்.
கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த், கன்னியாகுமரி எம்எல்ஏ என். தளவாய் சுந்தரம், மாவட்ட கோயில்கள் இணை ஆணையா் ஜான்சி ராணி, அறங்காவலா் குழு முன்னாள் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.