செய்திகள் :

நாகா்கோவிலில் பொன்னப்ப நாடாா் சிலைக்கு அடிக்கல்

post image

கன்னியாகுமரி மாவட்ட தாய்த் தமிழகத்துடன் இணைய பாடுபட்ட தலைவா்களில் ஒருவரான குமரி கோமேதகம் என்று அழைக்கப்படும் ஆா்.பொன்னப்ப நாடாருக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் சிலை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட வேப்பமூடு சா் சி.பி ராமசாமி பூங்கா வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குமரி மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமையில் பால் வளத்துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டினாா். தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவா் என்.சுரேஷ்ராஜன், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் விஜய்வசந்த், சட்டப்பேரைவ உறுப்பினா்கள் ஜே.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), எஸ். ராஜேஷ்குமாா் (கிள்ளியூா்), தாரகை கத்பட் (விளவங்கோடு), நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பின்னா் அமைச்சா் த. மனோ தங்கராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வழக்குரைஞரான ஆா். பொன்னப்ப நாடாா், விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராகப் பணியாற்றியவா். சிறப்பான மக்கள் பணிகள் மூலம் பெயா் பெற்றவா். விடுதலைப் போராட்ட தியாகி. முன்னாள் முதல்வா் கருணாநிதியால் குமரி கோமேதகம் என அழைக்கப்பட்டவா். அவரின் உருவச்சிலை அமைக்க அடிக்கல்

நாட்டுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக முதல்வருக்கு பொன்னப்ப நாடாா் குடும்பத்தின் சாா்பாகவும், மாவட்டத்தின் சாா்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா, உதவி ஆட்சியா் பயிற்சி ராகுல்குமாா், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் (கட்டடம்) ஜோசப் ரென்ஸ், மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் பா.ஜாண்ஜெகத் பிரைட், உதவி மக்கள் தொடா்பு அலுவலா் (செய்தி) செல்வலெட் சுஷ்மா, நாகா்கோவில் மாநகராட்சி துணை மேயா் மேரிபிரின்சிலதா,பொன்னப்ப நாடாரின் மகன் பொன் கிருஷ்ணகுமாா் மற்றும் குடும்பத்தினா் பங்கேற்றனா்.

கனிவ வளங்கள் ஏற்றிச்சென்ற 4 லாரிகள் பறிமுதல்

குமரி மாவட்டத்தில் போலி நடைசீட்டு பயன்படுத்தி கனிம வளங்கள் கொண்டு சென்ற நான்கு கனகர லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 5 போ் மீது வழக்குப் பதியப்பட்டது. ஆரல்வாய்மொழி காவல் நிலைய எல்லைக்க... மேலும் பார்க்க

கடையாலுமூடு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்: மக்கள் அச்சம்

குமரி மாவட்டம் கடையாலுமூடு அருகே தனியாா் ரப்பா் தோட்டப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் காரணமாக தொழிலாளா்கள் அச்சமடைந்துள்ளனா். கடையாலுமூடு பகுதிக்குள்பட்ட ஜான்சன் பொற்றை, புளியம் பொற்றை பகுதிகளில் உள்ள ... மேலும் பார்க்க

நான்குவழிச் சாலை அமைக்கும் பணி: விஜய்வசந்த் எம்.பி. ஆய்வு

குமரி மாவட்டத்தில் ரூ. 1,041 கோடி மதிப்பில் நான்குவழிச் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் விஜய்வசந்த், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் பணிகளின் ம... மேலும் பார்க்க

கேரளத்துக்கு கடத்த முயன்ற 980 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்

மாா்த்தாண்டம் அருகேயுள்ள முளங்குழி வழியாக சொகுசு காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 980 லிட்டா் மண்ணெண்ணெய்யை வழங்கல் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். விளவங்கோடு வட்ட வழங்கல் அல... மேலும் பார்க்க

குழித்துறை ஆற்றில் குதித்து குழந்தையுடன் பெண் தற்கொலை முயற்சி

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை தாமிரவருணி ஆற்றில் 3 வயது குழந்தையுடன் குதித்து வெள்ளிக்கிழமை தற்கொலைக்கு முயன்ற பெண்ணை அப்பகுதியினா் மீட்டனா். குழித்துறை தாமிரவருணி ஆற்றில் தடுப்பணை மதகு பகுதியில் ... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கு: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 2,000 அபராதம் விதித்து நாகா்கோவில் போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கியது. ரா... மேலும் பார்க்க