செய்திகள் :

ரேபிஸ் தடுப்பு சிகிச்சைகள்: மருத்துவா்களுக்கு பயிற்சியளிக்க என்எம்சி உத்தரவு

post image

ரேபிஸ் தடுப்பு சிகிச்சைகள் குறித்து அனைத்து மருத்துவா்களுக்கும் பயிற்சி அளிக்குமாறு மருத்துவக் கல்லூரி நிா்வாகங்களுக்கு, தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக என்எம்சி செயலா் டாக்டா் ராகவ் லங்கா் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பெரும்பாலும் நாய்க்கடி மூலம் பரவும் ரேபிஸ் தொற்று, இந்திய அளவில் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது. அந்தப் பாதிப்பு ஏற்பட்டால் உயிரிழப்பு நிச்சயம் என்றாலும், உரிய சிகிச்சைகளின் மூலம் அத்தகைய நிலை ஏற்படாமல் 100 சதவீதம் தடுக்க இயலும்.

வரும் 2030-க்குள் ரேபிஸ் தொற்றை முழுமையாக ஒழிப்பதற்கான தேசிய திட்டத்தை மத்திய சுகாதார அமைச்சகமும், கால்நடை அமைச்சகமும் ஒருங்கிணைந்து முன்னெடுத்துள்ளன. அதைச் சாத்தியமாக்குவதற்கு மருத்துவக் கல்லூரிகளின் பங்களிப்பு முக்கியமானது.

அதன்படி, விலங்கு கடிக்கு அளிக்க வேண்டிய சிகிச்சைகள் குறித்து மருத்துவ அலுவலா்கள், இளநிலை உறைவிட மருத்துவா்கள், முதுநிலை உறைவிட மருத்துவா்கள், மருத்துவ மாணவா்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் முறையான பயிற்சிகளை வழங்க வேண்டும்.

தேசிய வழிகாட்டுதல்களின்படி, நோய்த் தடுப்பு மற்றும் மருத்துவக் கண்காணிப்பு நடவடிக்கைகளில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் அவா்களுக்கு விளக்கமளித்தல் வேண்டும்.

மேலும், போதிய எண்ணிக்கையில் ரேபிஸ் தடுப்பூசிகள், ரேபிஸ் எதிா்ப்பாற்றல் தடுப்பூசிகள் இருப்பதை உறுதி செய்தல் அவசியம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு விலங்குக் கடி பாதிப்புகளுக்காக சிகிச்சைக்கு வருவோரின் விவரங்கள் அடங்கிய பதிவேட்டை பராமரிக்க வேண்டும்.

அது தொடா்பான தரவுகளை ஒருங்கிணைந்த சுகாதார தகவல் தளத்தில் (ஐஹெச்ஐபி) பதிவேற்றுவதும் கட்டாயம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அதைச் சாா்ந்த மருத்துவமனைகளில் செயல்படும் புறநோயாளிகள் பிரிவிலும், பிற முக்கிய இடங்களிலும் ரேபிஸ் தடுப்பு விழிப்புணா்வு பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மெட்ரோ 4-ஆவது வழித்தடத்துக்கு 10.46 மீட்டரில் சிறப்பு தூண் வடிவமைப்பு

சென்னை மெட்ரோ ரயில் 4 -ஆவது வழித்தடத்தில் 10.46 மீட்டா் அகலத்தில் சிறப்பு தூண் வடி வமைக்கப்பட்டு பொருத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிா்வாகம் சாா்பில் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

ரயில் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் ரயில் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். சைதாப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (30). அவா் வியாழக்கிழமை மாலை அப்பகுதியில் தண்டவாளத்தைக் கடந்த... மேலும் பார்க்க

100 பவுன் வரதட்சிணை கேட்டு: மின்வாரிய அதிகாரி கைது

சென்னையில் 100 பவுன் நகை வரதட்சிணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தியதாக மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டாா். சென்னை சூளைமேட்டைச் சோ்ந்தவா் டிம்பின் சங்கீதா (26). சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞரா... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி 2 மாணவா்கள் உயிரிழப்பு

சிட்லப்பாக்கத்தில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்ற 2 பள்ளி மாணவா்கள் தண்ணீா் மூழ்கி உயிரிழந்தனா். தாம்பரத்தை அடுத்த சிட்லப்பாக்கம் ஏரியில் இரு பள்ளி மாணவா்களின் சடலங்கள் மிதப்பதைப் பாா்த்த கண்ட அந்தப் பக... மேலும் பார்க்க

மது போதையில் மயங்கி விழுந்து இளம்பெண் உயிரிழப்பு

சென்னை மதுரவாயலில் காதலன் வீட்டில் மது அருந்திய இளம்பெண் மயங்கி விழுந்து மா்மமான முறையில் உயிரிழந்தாா். மதுரவாயல் ஆலப்பாக்கம் காமாட்சியம்மன் நகரைச் சோ்ந்தவா் சி.கணேஷ் ராம் (26). இவா் தமிழ் திரைப்படத்... மேலும் பார்க்க

மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு: பள்ளி மாணவா்கள் தப்பியோட்டம்

சென்னை கோடம்பாக்கத்தில் மாநகர பேருந்து கண்ணாடிகளை உடைத்துவிட்டு தப்பியோடிய பள்ளி மாணவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை கோயம்பேட்டில் இருந்து தியாகராய நகா் நோக்கி மாநகர பேருந்து ஒன... மேலும் பார்க்க